Populer Artikel

Wednesday, February 25, 2015

தமிழகத்தில் சித்தர்கள்


சாதிகள் உருவாகிய விதத்தை அகத்தியர் தன் பாடலில் கூறி நம்மை வியப்பில் ஆழ்த்தினார்

அகத்தியரின் குரு அஸ்வினி தேவர் அதனை தனக்கு கூறியதாகவும் கூறுகின்றார் . 

அக்காலத்தில் சித்தர்கள்  பலபல தொகுப்புகளாக வாழ்ந்துள்ளனர் . அப்படி வாழ்ந்த சித்தர்கள் தமிழகத்தில் கோடிக்கணக்கில் இருந்துள்ளனர் .

முதல் வர்க்கம் நாதாக்கள் இவர்கள் அறுபது பேர்கள் இவர்களே முதன்முதலில் கற்பமுண்டவர்கள் இதில் ஞானம் பெற்றவர்கள் எண்பது பேர்கள்.

அடுத்தது கம்பிளியான் தொகுப்பைச் சார்ந்தவர்கள் நூறு சித்தர்கள் என்றும் கோனார் தொகுப்பில் நூறு சித்தர்கள் என்றும் அதில் நுட்பம் பெற்ற சித்தர்கள் இருநூறு பேர்கள் என்றும் கூறுகிறார்.

கண்ணடியர் என்ற தொகுப்பில் ஆயிரம் சித்தர்கள் இருந்ததாகவும் ரோமர் என்ற தொகுப்பில் நாநூறு சித்தர்கள் வாழ்ந்ததாகவும் கொங்கிணியர் என்ற தொகுப்பில் இருநூறு சித்தர்கள் வாழ்ந்ததாகவும் கூறுகிறார்.

தமிழகத்தில் கண்டாமகரிஷியர் என்ற தொகுப்பும் இருந்துள்ளது . இவர்களை அகத்தியர் நாதர்கள் என்று கூறுகிறார் 

பவுஷமகரிஷி கூட்டம் விடலாபுரி என்ற பகுதியில் வாழ்ந்ததாகவும் குளிகை உண்ட பெரிய சித்தர்கள் இருநூறு பேர்கள் என்றும் கூறுகிறார் 

குடகுமலை பகுதியில் வாழ்ந்த சித்தர்களுக்கு மூப்பனார் என்று பெயர் இவர்கள் நாநூறு பேர்கள் ஆகும் 

அழகர் கூட்டம் என்ற தொகுப்பில் எழுநூறு சித்தர்கள் என்றும் குறும்பர் கூட்டத்தில் ஆயிரம் சித்தர்கள் வாழ்ந்ததாகவும் மறவர் தொகுப்பில் முன்னூறு சித்தர்கள் என்றும் நாயனார் கூட்டத்தில் நூற்றுப்பத்து சித்தர்கள் இருந்ததாகவும் கூறுகிறார்


கஞ்சமலை பகுதியில் வாழ்ந்த சித்தர்களுக்கு ஒசக்கூட்டத்தார் என்று பெயர்  இவர்களை அக்காலத்தில் முனிக்கூட்டம் என்று அழைப்பர் தற்போது இவர்களை நாம் பூசாரிகள் என்று அழைக்கிறோம்

Tuesday, February 17, 2015

பூதமகாரிடி



பூதமகாரிடியைப் பற்றி அகத்தியர் தன் நூலில் பூதமகாரிடியை கண்டவர்கள் அதிகமில்லை சண்டமாருதம் போல சலதாரை கேணிக்குள் வீற்றிருப்பார் என்றும் கூறுகிறார் . நீண்ட சடைமுடியுடன் தம்பிரான் போலிருப்பார் என்றும் துவாபர யுகத்தில் கேணிதனில் இறங்கி கடும் யோகத்தில் இருந்ததாகவும் அதன் மூலமாக கடும் சித்துக்களை பெற்றதாகவும் தாமும் அது போன்ற சித்துகளை பெறவில்லை என்றும் கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்.

இவர் கடவுளுக்கு ஒப்பானவர் என்றும் சதாகாலமும் வாசியோகம் செய்து கொண்டே இருப்பார் என்றும் அவரை யோகரிடி மற்றும் காலாங்கி நாதர் போன்ற சித்தர்கள் அவரிடம் ஆசி பெற்றுள்ளனர் என்று அகத்தியர் கூறுகிறார் 

Sunday, February 15, 2015

திருப்பெருந்துறையில் அகத்தியர்

அகத்தியர் பல தலங்களை வழிபட்டு விட்டு திருப்பெருந்துறையில் தவமெற்றியதாக பழங்கால நூல் ஒன்று கூறுகிறது . அதில் அகத்தியர் லோபா முத்திரையுடன் சென்றதாக அந்நூல்கூறுகிறது 
திருப்பெருந்துறையில் குருந்தவனத்திற்குள் அகத்தியர் நுழைந்தவுடன் குருந்தவன முனிவர்கள் அகத்தியரை வரவேற்று மகிழ்ந்ததாகவும் அப்பாடல் கூறுகிறது மாணிக்கவாசகருக்கு முன்பே குருந்தவனம் புனிதமிக்கது என்பது குறிப்பிடத்தக்கது


வேண்டும்பல வரமீந்தயன் மீண்டான்றன துலகில்
பாண்டங்கியே மொழிமாதுலோ பாமுத்திரை யோடும் 
ஆண்டுஞ்சில நாள்வைகிய கன்றலய மெங்குங்
கோண்டங்கில பிறையாற்றெழக் குறுமாமுனி குறுகி

வந்தித்துயர் குந்தத்திரு வடிவாமரன் றன்னைச் 
சந்தித்தடி தாழத்திகழ் சதுர்வேதபு றன்னைச் 
முந்நுற்றன னம்மாநகர் முதுவேதிய ரெவரும்
கொந்துற்றெமு மகிழ்வோடெதிர் கோலித்தொமூதுய்ந்தார்

நான் எழுதிய வல்லக்கோட்டையார் மனசாரம்

என் பாதிரி கோட்டைக்குள்  பாசம் மாறா வீற்றிருக்கும் 
கோட்டை வாழ் ஆண்டவா குருதேவா 
என் குணங்கெட கொண்டு ஆண்டுகொள்ள வா வா
குற்றமாறா உன் குருஅருள் தந்து நாளெல்லாம் 
உன் அடிமறவா ஆனந்தம் தர வா வா

நான் குணங்கெட்டேன் உன் குருவருளும் பெறக் கெட்டேன் 
உன் கூறுவேள் கொண்டு குழவுதமிழில் பாடக்கெட்டேன்
பகிரதனுக்கு பண்பு காட்டிய பரந்தாமா
உன் பாசமெனும் பக்தியில் பரவெளியில் பண்பு காட்ட வரந்தாமே
பாதிரியின் கீழ் அமர்ந்த பரலோகா
என் பத்து வாசலையும் அவிழ்த்திட வரந்தாமே

கோட்டை வாழ் ஆண்டவா


கச்சி ஏகம்பன்

அடியவருக்காக தன்னையே வளைத்து கொடுக்கும் கச்சி ஏகம்பன்

ஒருமுறை ஏகம்பனை காணச் சென்றபோது இச்சிற்பம் என் கண்ணில் தென்பட்டது மிக அருமையான சிற்பம் இச்சிற்பத்தின் மூலமாக நாம் பல உண்மைகளை அறிய முடிகிறது அடியவருக்காக ஈசன் இரங்கி வரும் தத்துவச்சிற்பமாக உள்ளது

Wednesday, February 11, 2015

திருமூலரிடி உபதேசம் கூறல்


அகத்தியர் திருமூலர் தன் சீடர்களுக்கு உபதேசம் கூறும் முறையை மிக அழகாக எடுத்துரைக்கிறார்.திருமூலரிடம் உபதேசம் பெற்ற சித்தர்கள் அவனியில் அதிகபேர்கள் உண்டு என்று கூறுகிறார் . சதாகாலமும் அவரைச் சுற்றி அநேக சித்தவர்க்கம் வீற்றிருப்பர் என்றும் பாரினிலே மூலவர்க்கத்தார்கள் கோடிக்கணக்கில் இருப்பர் என்றும் கூறுகிறார்.

"மூலராந் திருமூல ரிடியார்தாமும்
முனையான சீஷவர்க்க மானபேர்க்கு
காலனது வுபதேசஞ் சொல்லுவார்பார் "

"பாலன்னம் நீரையது பகுந்துவுண்ணும்
பாங்கான கதைபோல சீஷவர்க்கம் "

"அதிதமாம் ஞானோப தேசம்பெற்று
வவனிதனி லிருப்பவரே சித்தராகும் "

"கதிதமாம் மண்டபத்தை சுற்றியல்லோ
காட்சியுடன் வீற்றிருப்பார் சித்தர்வர்க்கம் "

"பதிதமாந் திருமூல வர்க்கத்தார்கள்
பாரினிலே யிருப்பார்கள் கோடியாமே "

பிருகு முனி

பிருகு முனி
பிருகு முனி பிரம்மனால் உருவாக்கப்பட்டார் என்று புராணங்கள் கூறுகிறது. அவருக்கு குரு அவருடைய தந்தையே . கடுமையான தவத்தின் பிரதிபலனால் இறைத்தன்மையை உணர்ந்து கொண்டார் . தவத்தின் ஒவ்வொரு படியிலும் பலபல கேள்விகள் எழுந்துள்ளன இருந்தும் கடுந்தவத்தினால் இறைத்தன்மையைப் பெற்றார். 


பிருகு முனி ஒளித்தன்மை பெற்றார் என்று நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும் எனில் நாம் செய்ய வேண்டியது கடுந்தவமே.  கடுந்தவத்தால் மட்டுமே அவரை அணுக இயலும் மற்றல்லாது புறச்செயல்கள் பயன்தராது . இது சற்று கடினமானதுதான் என்னை பொறுத்த வரையில் அவர் மீது அநேக விருப்பம் கொண்டால் நம்முடைய முயற்சிகள் யாவும் அவரை சார்ந்ததாக அமைவதால் அவர் நம் மீது இரக்கம் காட்டகூடும் காரணம் எதுவெனில் அவர் கருணையே வடிவானவர். 

Saturday, February 7, 2015

திருமூலரிடியார்

திருமூலர் எப்படி இருப்பார் என்று பலருக்கு விருப்பம் இருக்கும் ஆனால் நமக்கு அந்த பாக்கியம் இல்லை இத்தகைய அரிய பாக்கியத்தை அகத்திய சுவாமி அருளி உள்ளார்
திருமூலர் தளிரான ரோமம் உடலெங்கும் கொண்டவராகவும் நிண்ட சடையுடன் சிவபெருமானை போல் இருப்பார் என்றும் படிகநிறம் போன்று உடல் வண்மை கொண்டவராகவும் இருப்பார் என்று அகத்திய சுவாமி கூறுகிறார் 

 ''நலமான திருமூலரிடியார்தாமும்
தளிரான ரோமமது முன்னூர்பாகம்
சடையுடனே தம்பிரான் போலிருப்பார் ''

''பளியான ரிடியாரும் படிகம்போலே
பாங்குடனே வீற்றிருக்கக் காணலாமே ''

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8