Populer Artikel

Saturday, May 10, 2014

உதயகிரிச் சித்தர் -சதுரகிரி-மாவூற்று

சதுரகிரி மலை அடிவாரத்தில்  தபோவனம் ஒன்று இருக்கிறது.அதனுடைய பெயர் மாவூற்று ஆகும்.

உதயகிரிச் சித்தர்

சதுரகிரி மலை அடிவாரத்தில்  தபோவனம் ஒன்று இருக்கிறது.அதனுடைய பெயர் மாவூற்று ஆகும்.

அந்த மாவூற்றானது சிவபெருமான் சடா மகுடத்திலிருந்து சித்தர்களுக்காக ஒரு துளி தீர்த்தத்தை விட அத்துளி ஊற்றாகி நாளடைவில் பெரிய குளமாக ஆகியது.அதில் தீர்த்தமாடினால் அநேக பாவங்கள் நீங்கும்.

ஏனென்றால் இந்தத் தலத்தில் அநேக முனிவர்கள், ரிஷிகள் கேட்டு கொண்டதற்காக சிவபெருமான் கிருபை கூர்ந்து மகாலிங்க மூர்த்தியாக தரிசனம் கொடுத்து கொண்டிருப்பதால் புண்ணிய தலமாக உள்ளது மாவூற்று.

அந்த மாவூற்றுக்கு வடப்பக்கம் இருக்கிற உதயகிரியில் நேர்வடக்காக மலைமேல் அம்பிடும் தூரம் போனால் குகையிருக்கிறது.அந்த குகையில் உதயகிரிச் சித்தர் இருக்கிறார் என்று கோரக்கர் தன் மலைவடாகத்தில் கூறுகிறார்.

Friday, May 9, 2014

பூபால முனிவர்

பூபால முனிவர் வாழ்ந்த பகுதி பூரிமலை ஆகும்.

பூபால முனிவர்

பூபால முனிவர் வாழ்ந்த பகுதி பூரிமலை ஆகும்.சிவத்தியான முனிவர் குகையிலிருந்து நேர்கிழக்காக வருகிற பாதையில் வந்து வடக்கே போகிற பாதையில் அரை நாழிகை வழி தூரம் வந்தால் அனேக மரங்கள் சூழ்ந்த வனம் என்றும் அங்கு நெல்லி மரங்கள் அனேகமிருக்கிறது என்கிறார் கோரக்கர்.அந்த மரம் பெரியதாக இருக்கும் என்கிறார்.

அந்த வனத்துக்கு கீழ்பக்கம் வருகிற பாதையில் அரைவழி தூரத்தில் ஓடை இருக்கிறது என்கிறார்.அந்த ஓடையில் கூப்பிடும் தூரம் போனால் அனேக மரஞ்செடிகொடிகள் சூழ்ந்த வனத்தின் மேல்பக்கம் உள்ள பகுதியில் பூபால முனிவர் ஆஸ்ரமம் இருந்ததாக கோரக்க முனிவர் கூறுகிறார்.

Tuesday, May 6, 2014

சிவத்தியான முனிவர்

சிவத்தியான முனிவர் இவரைப் பற்றி கோரக்கர்

சிவத்தியான முனிவர்

சிவத்தியான முனிவர் இவரைப் பற்றி கோரக்கர் பூரிமலைக்கு வடபுரம் சிங்குளமென்ற கீழ் பொத்தையருகே பரமேஸ்வரன் கோவிலுண்டு.அதிலே மூன்று சுனைகள் உண்டு என்றும் தெற்குபக்க சுனையருகே தென்பக்கம் வருகிற பாதையில் ஒரு நாழிகை தூரம் வந்த பின் வடபக்கம் வருகிற பாதை வழியாக வந்தால் உச்சமலை இருக்கிறது.அந்த மலைக்கு வடக்கு பக்கம் வருகிற பாதை வழியே மலையோரமாய் வந்தால் சரிவில் சிவத்தியானவர் வாழ்ந்த குகை இருக்கிறது என்று கூறுகிறார்.

அமுத மகா ரிஷி

அமுத மகா ரிஷி இவரைப் பற்றி கோரக்கர்

அமுத மகா ரிஷி

அமுத மகா ரிஷி இவரைப் பற்றி கோரக்கர் தன் மலைவாகடத்தில் கூறிவுள்ளார்.திருவனந்தபுரத்திற்கு வடக்கிழக்கே ஒரு நாழிகை வழி தூரத்திற்கப்பால் பூரிமலை என்று செம்மண் தரைகளாய் இருக்கும்.அங்கு மிளகு செடிகள் அதிகமாக விளைந்திருக்கும்.அதன் வடப்பக்கம் கூப்பிடும் தூரத்தில் பெரிய வனம் ஒன்றும் தென்பக்கம் அமுத மகா ரிஷி வாழ்ந்த பகுதி இருக்கிறது என்று கோரக்கர் கூறுகிறார்.

Monday, May 5, 2014

பராசர முனிவர்-திருப்பெருந்துறை-குருந்தவனம்

பராசர முனிவர் தனக்கு ஞான யோகங்களில் சிறந்ததொரு மகன் பிறக்க வேண்டுமென்று கருதி திருப்பெருந்துறை சென்று ஒரு தீர்த்தத் தடமுண்டாக்கி குருந்தீசரை வழிபடுகிறார்.இறைவன் ஆத்மநாதராய் வந்து காட்சி கொடுத்து வியாச முனிவரை மகனாக அருள் செய்கிறார்.வியாசன் உடன் திருப்பெருந்துறை சென்று தவம் புரிய குருந்தவனம் செல்கிறார்.பராசர முனிவர் உண்டாக்கிய தீர்த்தம் பராச தீர்த்தம்.இத்தீர்த்தம் திருப்பெருந்துறையில் உள்ளது.இது எல்லா நலன்களையும் தர வல்லது.

பூவாடைச் சித்தர்-விமல மலை

பூவாடை சித்தர் வாழ்ந்த பகுதி வள்ளி மலைக்கு மேற்கே விமலமலை ஆகும்.

பூவாடை சித்தர்

பூவாடை சித்தர் வாழ்ந்த பகுதி வள்ளி மலைக்கு மேற்கே விமலமலை ஆகும்.விமலமலையின் மீது பெருங்கானல் உள்ள பகுதியில் அவருடைய ஆஸ்ரமம் இருந்ததாக போகர் கூறுகிறார்.அவர் வாழ்ந்த அந்த பகுதியில் அதிக மலர்கள் இருக்கும் என்றும் மலர்களின் மணம் அப்பகுதி முழுவதும் சூழ்ந்திருக்கும் என்றும் போகரின் மலைவாகடத்தில் கூறப்பட்டுள்ளது.

Sunday, May 4, 2014

சவுபரி முனிவர்-திருப்பெருந்துறை

சவுபரி முனிவர் திருப்பெருந்துறை.

சவுபரி முனிவர்

சவுபரி முனிவர் முக்தி பெற்ற திருத்தலம் திருப்பெருந்துறை.சவுபரி முனிவர் ஒரு நீர்நிலை அருகில் தவம் புரிந்து கொண்டு இருந்தார்.அப்போது தன் குஞ்சுகளோடு மகிழ்ந்து திரிந்த ஒரு மீனை பார்த்து தானும் இவ்வாறு திகழ வேண்டுமென்று கருதி துருவாசரிடம் வழி கேட்க அவர் திருப்பெருந்துறையில் இருக்கும் மானவ தீர்த்தத்தில்  உன் விருப்பம் நிறைவேறும் என்றார்.இவரை பற்றிய குறிப்புகள் திருப்பெருந்துறை வரலாற்றில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

Thursday, May 1, 2014

சங்கிலிபூதம்

அகஸ்தியர் மாந்திரிக காவியத்தில் சங்கிலிபூதம்

சங்கிலிபூதம்

அகஸ்தியர் மாந்திரிக காவியத்தில் சங்கிலி பூதத்தை பற்றியும் அதனுடைய பிரணவ மந்திரத்தை பற்றியும் குறிப்பிடுகிறார்.

மானான மகாதேவா சங்கிலிநாதா
மாசற்ற வூஞ்சலுடக் கதிகாரிவாயே
அதிகாரி அடவிவனக் காத்தாள்வாவா
ஐங்கரனே சங்கரனே சதாசிவமேவாவா
மதியுடைய தழைமரங் காய்கனிகள்
மகத்தான புஷ்பமலர் வாடைவாவா
பதியுடைய பழிகார பூசைகொள்ளும்
பால்முகத்தில் நின்றுவிளை யாடும்பூதா
மதியுடைய வண்ணல் சங்கிலியேவாடா
மாசற்ற குலதெய்வப் பூதம்வாயே.

இவ்வாறு வாவென்று அழைக்க சங்கிலிபூதம் ஆசிர்வதிக்கும் என்றும் தாவென்ற சப்தமுடன் சாஷ்டங்க மளிக்கும் என்று கூறுகிறார்.

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8