Populer Artikel

Friday, July 4, 2014

திருப்பெருந்துறை சித்தர் காரப்பெரிய நாயினார்

சித்தர் காரப்பெரிய நாயினார்
திருப்பெருந்துறையில் இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இச்சித்தரின் ஜிவசமாதி ஊரின் பெயர் காராவயல்.இவர் ஆதியில் வாழ்ந்த சித்தர் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்விடம் உசிலை மர வனமாக உள்ளது.தபசு செய்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது.இச்சித்தருடன் ஏராளமான சீடர்கள் இருந்ததாக தெரிகிறது.இவர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள் இப்பகுதி எங்கும் பரவி கிடக்கின்றன.சித்தரின் ஜீவசமாதி பீடம் சதுரவடிவாக உள்ளது.பீடத்திற்கு பின்புறம் தற்போது நாகத்தின் சிலை வைக்கப்பட்டுள்ளது.


தீர்த்தாண்டதானம் இராமர் கோவில்


தீர்த்தாண்டதானத்தில் இராமபிரான் தங்கி இருந்து தபசு மேற்கொண்ட மற்றொரு பகுதி முத்துகுடா.இவ்வூர் தீர்த்தாண்டதானத்திற்கு அருகில் உள்ளது.தீர்த்தாண்டதானம்,முத்துகுடா,சுந்தர பாண்டிய பட்டிணம் இவை யாவும் திருப்புணவாயிலுக்கு அருகில் உள்ளது.திருப்புணவாயிலில் இருந்து திருப்பெருந்துறை 20 கி.மீ தொலைவில் உள்ளது.முத்துகுடா இராமர் கோவில் கருங்கல்லால் கட்டப்படாத கோவில்.இராமரின் உருவம் மட்டும் கருங்கல்லில் உல்ளது.இது கோவில் போன்ற அமைப்பில் உள்ளது.இதனுடைய விளக்கம் சரியாக எனக்கு புரியவில்லை.

Thursday, July 3, 2014

தீர்த்தாண்டதானம் சித்தர் ஜீவசமாதி


தீர்த்தாண்டதானம் இவ்வூர் திருப்பெருந்துறையில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது.கோவிலின் பின் பகுதியில் இவரது ஜீவசமாதி அமைந்துள்ளது.அகஸ்தியர் திருப்புனவாயிலின் தபசில் இருந்த பொழுது இராமபிரான் அப்பகுதியில் வருவதை உணர்கிறார்.பின்பு இராமரை சந்தித்து தீர்த்தாண்டதானத்தில் இருக்கும் இறைவனை வழிபடுமாறு கூறுகிறார்.இராமரும் அங்கு ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி இறைவனை வழிபடுகிறார்.



கோவிலின் பின் பகுதியில் உள்ள சித்தரின் ஜீவசமாதி பீடம் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் காணப்படுகிறது.இச்சித்தரின் திருவுருவம் கோவிலின் பின்பகுதியில் தவக்கோலத்தில் இருப்பது போன்றும் அருகில் ஒரு மரம் மற்றும் பசு அருகில் இருப்பது போன்றும் சிற்பமாக அமைந்துள்ளது.

இராமபிரான் தீர்த்தாண்டதானத்தில் இருந்து தபசு மேற்கொண்டார் என்பதற்கு நிறைய சான்றுகள் உண்டு.தீர்த்தாண்டதானத்திற்கு அருகில் சுந்தர பாண்டிய பட்டிணம் என்ற ஒரு ஊர் உள்ளது. இந்த ஊரில் இராமபிரான் தபசு செய்த இடம் உள்ளது.அங்கு இராமரின் பாதம் உள்ளது.இக்கோவில் மிகவும் சிதலமடைந்துள்ளது.இவ்விடம் மிகவும் புதர் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது.




Saturday, June 28, 2014

முதலியப்பர் ஜீவசமாதி திருப்பெருந்துறை


திருப்பெருந்துறை ஆத்மநாதர் கோவிலின் பின் பகுதியில் தீர்த்தக்குளம் ஒன்று உள்ளது.இக்குளத்தின் பின் பகுதியில் இச்ஜீவசமாதி அமைந்துள்ளது.இச்ஜீவசமாதியே புலஸ்தியரின் ஜீவசமாதி என்று எனது குருநாதர் கூறினார்.இவ்வூர் மக்கள் புலஸ்தியரை முதலியப்பர் என்று கூறுவது வழக்கம் என்றும் புலஸ்தியருடன் அவரது சீடர்கள் அங்கு வாழ்ந்ததாகவும் அவர்கள் தபசு செய்த இடம் என்றும் கூறினார்.இவ்விடம் ஏரி கரை ஓரத்தில் அமைந்துள்ளது.தபசு செய்வதற்கு ஏற்ற இடமாகவும் இது உள்ளது.

இவ்விடத்தில் முதலியப்பர் யோகநிலையில் இருப்பது போன்று சிலை உள்ள்து.அதற்கு கீழ் சதுர ஆவுடை அமைந்துள்ளது.இந்த ஆவுடை ஆத்மநாதரின் ஆவுடை போன்றே அமைந்துள்ளது.இங்கு வணங்க வருபவர்கள் எந்த வித பூசை பொருள்களையும் சாத்த கூடாது.குறிப்பிட்ட ஒரு வகை இலையை மட்டுமே அவருக்கு இட வேண்டும்.இவ்விலை ரகசியமானது.இந்த இடத்திற்கு செல்வோருக்கு திரும்பிவர மனமிராது.அவசியம் கண்டு களிக்க வேண்டிய யோகபூமி.இவ்விடம் ஆதினத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

Friday, June 27, 2014

சித்தரின் ஜீவசமாதி கீழாச்சேரி


பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் வடகாடு என்ற கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் இருந்து 2கிலோ மீட்டர் தொலைவில் கீழாச்சேரி என்ற கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் மிகவும் பழமையான புராதாண காலத்து ஈஸ்வரன் கோவில் உள்ளது.கோவிலின் சிவலிங்கமும் நந்தியும் மிகவும் பழமை வாய்ந்தது.ஆதியில் இக்கோவில் மண்ணில் புதைந்து இருந்ததாகவும்  இச்சிவலிங்கத்தை ஆடாத செக்கு என்றும் அசையாத அம்மி என்றும் கூறுவர்.தற்சமயம் இச்சிவலிங்கம் வெளிப்பட்டு அனைவரும் வணங்கும் வண்ணம் உள்ளது.இப்பகுதி வனாந்திரத்தின் மத்தியில் உள்ளது.இச்சிவலிங்கம் ஆதியில் அங்கு வாழ்ந்த சித்தரின் ஜீவசமாதி என்றும் கூறுவர்.சித்த மார்க்கத்தில் செல்வோர் இத்தன்மையை நன்கு உணரலாம்.

Saturday, May 10, 2014

உதயகிரிச் சித்தர் -சதுரகிரி-மாவூற்று

சதுரகிரி மலை அடிவாரத்தில்  தபோவனம் ஒன்று இருக்கிறது.அதனுடைய பெயர் மாவூற்று ஆகும்.

உதயகிரிச் சித்தர்

சதுரகிரி மலை அடிவாரத்தில்  தபோவனம் ஒன்று இருக்கிறது.அதனுடைய பெயர் மாவூற்று ஆகும்.

அந்த மாவூற்றானது சிவபெருமான் சடா மகுடத்திலிருந்து சித்தர்களுக்காக ஒரு துளி தீர்த்தத்தை விட அத்துளி ஊற்றாகி நாளடைவில் பெரிய குளமாக ஆகியது.அதில் தீர்த்தமாடினால் அநேக பாவங்கள் நீங்கும்.

ஏனென்றால் இந்தத் தலத்தில் அநேக முனிவர்கள், ரிஷிகள் கேட்டு கொண்டதற்காக சிவபெருமான் கிருபை கூர்ந்து மகாலிங்க மூர்த்தியாக தரிசனம் கொடுத்து கொண்டிருப்பதால் புண்ணிய தலமாக உள்ளது மாவூற்று.

அந்த மாவூற்றுக்கு வடப்பக்கம் இருக்கிற உதயகிரியில் நேர்வடக்காக மலைமேல் அம்பிடும் தூரம் போனால் குகையிருக்கிறது.அந்த குகையில் உதயகிரிச் சித்தர் இருக்கிறார் என்று கோரக்கர் தன் மலைவடாகத்தில் கூறுகிறார்.

Friday, May 9, 2014

பூபால முனிவர்

பூபால முனிவர் வாழ்ந்த பகுதி பூரிமலை ஆகும்.

பூபால முனிவர்

பூபால முனிவர் வாழ்ந்த பகுதி பூரிமலை ஆகும்.சிவத்தியான முனிவர் குகையிலிருந்து நேர்கிழக்காக வருகிற பாதையில் வந்து வடக்கே போகிற பாதையில் அரை நாழிகை வழி தூரம் வந்தால் அனேக மரங்கள் சூழ்ந்த வனம் என்றும் அங்கு நெல்லி மரங்கள் அனேகமிருக்கிறது என்கிறார் கோரக்கர்.அந்த மரம் பெரியதாக இருக்கும் என்கிறார்.

அந்த வனத்துக்கு கீழ்பக்கம் வருகிற பாதையில் அரைவழி தூரத்தில் ஓடை இருக்கிறது என்கிறார்.அந்த ஓடையில் கூப்பிடும் தூரம் போனால் அனேக மரஞ்செடிகொடிகள் சூழ்ந்த வனத்தின் மேல்பக்கம் உள்ள பகுதியில் பூபால முனிவர் ஆஸ்ரமம் இருந்ததாக கோரக்க முனிவர் கூறுகிறார்.

Tuesday, May 6, 2014

சிவத்தியான முனிவர்

சிவத்தியான முனிவர் இவரைப் பற்றி கோரக்கர்

சிவத்தியான முனிவர்

சிவத்தியான முனிவர் இவரைப் பற்றி கோரக்கர் பூரிமலைக்கு வடபுரம் சிங்குளமென்ற கீழ் பொத்தையருகே பரமேஸ்வரன் கோவிலுண்டு.அதிலே மூன்று சுனைகள் உண்டு என்றும் தெற்குபக்க சுனையருகே தென்பக்கம் வருகிற பாதையில் ஒரு நாழிகை தூரம் வந்த பின் வடபக்கம் வருகிற பாதை வழியாக வந்தால் உச்சமலை இருக்கிறது.அந்த மலைக்கு வடக்கு பக்கம் வருகிற பாதை வழியே மலையோரமாய் வந்தால் சரிவில் சிவத்தியானவர் வாழ்ந்த குகை இருக்கிறது என்று கூறுகிறார்.

அமுத மகா ரிஷி

அமுத மகா ரிஷி இவரைப் பற்றி கோரக்கர்

அமுத மகா ரிஷி

அமுத மகா ரிஷி இவரைப் பற்றி கோரக்கர் தன் மலைவாகடத்தில் கூறிவுள்ளார்.திருவனந்தபுரத்திற்கு வடக்கிழக்கே ஒரு நாழிகை வழி தூரத்திற்கப்பால் பூரிமலை என்று செம்மண் தரைகளாய் இருக்கும்.அங்கு மிளகு செடிகள் அதிகமாக விளைந்திருக்கும்.அதன் வடப்பக்கம் கூப்பிடும் தூரத்தில் பெரிய வனம் ஒன்றும் தென்பக்கம் அமுத மகா ரிஷி வாழ்ந்த பகுதி இருக்கிறது என்று கோரக்கர் கூறுகிறார்.

Monday, May 5, 2014

பராசர முனிவர்-திருப்பெருந்துறை-குருந்தவனம்

பராசர முனிவர் தனக்கு ஞான யோகங்களில் சிறந்ததொரு மகன் பிறக்க வேண்டுமென்று கருதி திருப்பெருந்துறை சென்று ஒரு தீர்த்தத் தடமுண்டாக்கி குருந்தீசரை வழிபடுகிறார்.இறைவன் ஆத்மநாதராய் வந்து காட்சி கொடுத்து வியாச முனிவரை மகனாக அருள் செய்கிறார்.வியாசன் உடன் திருப்பெருந்துறை சென்று தவம் புரிய குருந்தவனம் செல்கிறார்.பராசர முனிவர் உண்டாக்கிய தீர்த்தம் பராச தீர்த்தம்.இத்தீர்த்தம் திருப்பெருந்துறையில் உள்ளது.இது எல்லா நலன்களையும் தர வல்லது.

பூவாடைச் சித்தர்-விமல மலை

பூவாடை சித்தர் வாழ்ந்த பகுதி வள்ளி மலைக்கு மேற்கே விமலமலை ஆகும்.

பூவாடை சித்தர்

பூவாடை சித்தர் வாழ்ந்த பகுதி வள்ளி மலைக்கு மேற்கே விமலமலை ஆகும்.விமலமலையின் மீது பெருங்கானல் உள்ள பகுதியில் அவருடைய ஆஸ்ரமம் இருந்ததாக போகர் கூறுகிறார்.அவர் வாழ்ந்த அந்த பகுதியில் அதிக மலர்கள் இருக்கும் என்றும் மலர்களின் மணம் அப்பகுதி முழுவதும் சூழ்ந்திருக்கும் என்றும் போகரின் மலைவாகடத்தில் கூறப்பட்டுள்ளது.

Sunday, May 4, 2014

சவுபரி முனிவர்-திருப்பெருந்துறை

சவுபரி முனிவர் திருப்பெருந்துறை.

சவுபரி முனிவர்

சவுபரி முனிவர் முக்தி பெற்ற திருத்தலம் திருப்பெருந்துறை.சவுபரி முனிவர் ஒரு நீர்நிலை அருகில் தவம் புரிந்து கொண்டு இருந்தார்.அப்போது தன் குஞ்சுகளோடு மகிழ்ந்து திரிந்த ஒரு மீனை பார்த்து தானும் இவ்வாறு திகழ வேண்டுமென்று கருதி துருவாசரிடம் வழி கேட்க அவர் திருப்பெருந்துறையில் இருக்கும் மானவ தீர்த்தத்தில்  உன் விருப்பம் நிறைவேறும் என்றார்.இவரை பற்றிய குறிப்புகள் திருப்பெருந்துறை வரலாற்றில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

Thursday, May 1, 2014

சங்கிலிபூதம்

அகஸ்தியர் மாந்திரிக காவியத்தில் சங்கிலிபூதம்

சங்கிலிபூதம்

அகஸ்தியர் மாந்திரிக காவியத்தில் சங்கிலி பூதத்தை பற்றியும் அதனுடைய பிரணவ மந்திரத்தை பற்றியும் குறிப்பிடுகிறார்.

மானான மகாதேவா சங்கிலிநாதா
மாசற்ற வூஞ்சலுடக் கதிகாரிவாயே
அதிகாரி அடவிவனக் காத்தாள்வாவா
ஐங்கரனே சங்கரனே சதாசிவமேவாவா
மதியுடைய தழைமரங் காய்கனிகள்
மகத்தான புஷ்பமலர் வாடைவாவா
பதியுடைய பழிகார பூசைகொள்ளும்
பால்முகத்தில் நின்றுவிளை யாடும்பூதா
மதியுடைய வண்ணல் சங்கிலியேவாடா
மாசற்ற குலதெய்வப் பூதம்வாயே.

இவ்வாறு வாவென்று அழைக்க சங்கிலிபூதம் ஆசிர்வதிக்கும் என்றும் தாவென்ற சப்தமுடன் சாஷ்டங்க மளிக்கும் என்று கூறுகிறார்.

Wednesday, April 30, 2014

சூத முனிவர்

திருப்பெருந்துறையின் வரலாற்றினை முதன்முதலில் எடுத்து கூறியவர் சூத முனிவர்.

சூத முனிவர்

திருப்பெருந்துறையின் வரலாற்றினை முதன்முதலில் எடுத்து கூறியவர் சூத முனிவர்.மாணிக்கவாசகரின் காலத்திற்கு முன்பே திருப்பெருந்துறை புகழ்பெற்று விளங்கியது.இத்தலம் பாண்டிய நாட்டுக்கு உட்பட்டது.இங்கு ஓடும் வெள்ளாறு பெருமை மிக்கது.சூத முனிவர் நைமிசாரணியத்தில் வாழும் முனிவர்கள் வேண்ட திருப்பெருந்துறையின் வரலாற்றினை கூறினார்.புரூரவச் சக்கரவர்த்தி முதற்கண் ஆத்மநாதர் என்னும் சொற்பொருளை விளக்க வேண்டும் என  தவுமியரை வேண்ட அவர் ஆத்மாவின் விளக்கத்தை கூறி அவ்வாத்மாவுக்கு நாதராய் விளங்குதலால் ஆத்மநாதர் என விளக்கி கூறினார்.

Tuesday, April 29, 2014

அசுவதா ரிஷி-நாக மலை

அசுவதா ரிஷி-நாக மலை

அசுவதா ரிஷி-நாக மலை

அசுவதா ரிஷி  வாழ்ந்த பகுதி  பொதிகை  மலை.அம்மலையின்  பக்கத்தில்  நாக மலை உள்ளது.அம்மலையின் அடிவாரத்தில்  நாதாக்கள் வாழ்ந்தனர்.அவர்கள்  அங்கு வரும் மனிதர்களுக்கு  காயகல்ப  மருந்துகளை  தந்து உதவினர்.நாக மலையின்  கிழக்கு  பகுதியில்  ஓடை ஒன்றும் மாமர விருச்சதின் அடியில் அசுவதா ரிஷி வாழ்ந்ததாக  கூறபடுகிறது.அவருடன் கமலமுனியும் இருப்பதாக அகஸ்தியர் கூறுகிறார். திருமூல வர்க்கத்தார்கள் காப்பியம் 4000 தை அசுவதா ரிஷியிடம் தந்து அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்று கூறியதாகவும்  உள்ளது. 

Sunday, April 27, 2014

Sathuragiri sandeeshvara munivar-சண்டீஷ்வர முனிவர்

sandeeshvara munivar lives in sathuragiri north side plain land contains sandeeshvara munivar aashramam.

sandeeshvara munivar

sandeeshvara munivar lives in sathuragiri north side plain land contains sandeeshvara munivar aashramam.siddhars are going to meet sandeeshvara munivar and asked sandeeshvara munivar's plum leaf(KAVIYAM 1000).he gave his all plum leaf to siddhars.sandeeshvara munivar told to siddhars if you study all these plum leaf, you must reach peerinpa nilai.THIRUMOOLA VARKKATHAR bought this plum leaf from sandeeshvara munivar

Saturday, April 26, 2014

Dharukavana rishi-தாருகாவனரிஷி -பழனி வராககிரி

பழனி வராககிரி தாருகாவன ரிஷி வராககிரிக்கு மேலே வந்தால் ஒரு நாழிகை தூரத்தில் பூங்காவனம் இருக்கிறது.

Dharukavana rishi

Dharukavana rishi lives in kurumpa nadu at poothigai malai, its a forest.its have mandabam near by big falls
its dharukavana rishi meditation area.its contains lot of sandal trees.siddhars came to see him and do asdanga poojai.on top of that mandapam Dharukavana rishi always in meditation think about siva and he teach other siddhars.dharukavana rishi place name is called dharukavanam.lot of elephants and forest dogs are there in that place.dharukavana rishi lves many years in dharukavanam afterwards he teach to poothigai malai agasthiyar.dharukavana rishi hiding sendura kalpam in dharukavanam.

பழனி வராககிரி தாருகாவன ரிஷி வராககிரிக்கு மேலே வந்தால் ஒரு நாழிகை தூரத்தில் பூங்காவனம் இருக்கிறது.அந்த பூங்காவனத்தின் மேல் பக்கம் இரண்டு நாழிகை தூரத்தில் குடப்பாறையும் அப்பாறைக்கு மேற்காக அரை நாழிகை தூரம் போனால் தாருகாவனம் இருக்கிறது.
அந்த வனத்தின் மத்தியில் தாருகாவனத்து ரிஷியின் ஆஸ்ரமம் இருந்ததாக கோரக்கர் கூறுகிறார்.

Friday, April 25, 2014

Jenaga munivar

 jenaga munivar lives mountain in shozhavala nadu.AGATHIYAR 12000 KAVIYAM gives the information about him.jenaga munivar staying mountain have seven falls, thousand steps in top.

jenaga munivar

 jenaga munivar lives mountain in shozhavala nadu.AGATHIYAR 12000 KAVIYAM gives the information about him.jenaga munivar staying mountain have seven falls, thousand steps in top. on the top it have cave he lives in that cave.agathiyar says every step siddhars stay.this mountain contains lot of siddhars its called as siddhars fort.siddhars collect  and save lot of thiraviyangal.kali and bairavar secure that  thiraviyangal. this mountain also called jenaga muni kottai.

Wednesday, April 23, 2014

Yuganda Rishi -யுகாந்த ரிஷி

yuganda rishi , i got idea and interest to draw this rishi, about this rishi i got  more information in "AGASTHIYAR 12000 KAVIYAM"

yuganda rishi

yuganda rishi , i got idea and interest to draw this rishi, about this rishi i got  more information in "AGASTHIYAR 12000 KAVIYAM".not only yuganda rishi, agathiyar says lot of unknown rishis, when i was read this book i know the information about the following rishis,
GARUDA MAHARISHI
DHUVABARA RISHI
NAVAKANDA RISHI
ANJANA MAHARISHI
they are related with THIRUMOOLAR.i had idea to draw all of them.am more interested to create the paintings only not to write content. because already lot of rishis and  siddhars give more informations. now what we do in  vaasi to catch the "VAASI LAYAM".

Anjana maharishi

Thursday, April 3, 2014

Brahmarshi Atri-அத்திரி மகா ரிஷி

அத்திரி மகா ரிஷி தாணிப்பாறை மலையிலிருந்துவடக்கு முகமாய் போகிற பாதை வழி வந்தால் அம்பிடும் தூரத்தில் கருப்பணசுவாமி கோவில் இருக்கிறது.

அத்திரி மகா ரிஷி

அத்திரி மகா ரிஷி தாணிப்பாறை மலையிலிருந்துவடக்கு முகமாய் போகிற பாதை வழி வந்தால் அம்பிடும் தூரத்தில் கருப்பணசுவாமி கோவில் இருக்கிறது.அதை கடந்து கூப்பிடும் தூரம் வந்தால் குதிரை குத்திப்பாறை இருக்கிறது.அந்தப் பாறைக்கு வடக்கு முகமாய் போகிற ஆற்றைக் கடந்து வடப்பக்கம் கூப்பிடும் தூரத்தில் படிவெட்டிப்பாறை இருக்கிறது.

அதை கடந்து அம்பிடும் தூரம் வந்தால் ஒரு காட்டாறு வருகிறது.அதற்கு வடப்பக்கம் போகிற பாதையில் அரைநாழிகை வழி தூரம் போனால் கவுண்டின்னிய ஆறு வருகிறது.அந்த ஆற்றுக்கு மேல்புறம் பத்தடி தூரத்தில் இருக்கிற அத்தி ஊற்றுக்கு வடப்பக்கம் அத்திரி மகாரிஷி யாகம் செய்த பாறை இருக்கிறது.பாறையின் மேல்பக்கம் அவருடைய ஆஸ்ரமம் இருந்ததாக கோரக்கர் கூறுகிறார்.

Monday, March 31, 2014

ஆத்மநாதசுவாமி-குருந்தொளிநாதர்-Athmanadha Swamy


முக்திநன்  முதற்பொரு முதற்பொருளாகுமுன்னவர் 
கொத்தலர் குருந்தினிற் குருவின் ரூபமாய்
 வைத்தெதிர் தன்வய மாக்கும் வாதவூர் 
 அத்தர்தாள் தொழுதுளத் தவல மாற்றுவாம்,

ஆத்மநாதசுவாமி மாணிக்கவாசகரின் குரு ஆவார்.ஆத்மநாதசுவாமி திருப்பெருந்துறையில் அந்தண குழந்தைகளுக்கு வேதங்களை கற்பித்தார்.அதற்காக அவர் பெற்ற தட்சணை புழுங்கல் சாதம்,கீரை மற்றும் பாகற்காய்.ஆத்மநாதசுவாமி திருக்கோவிலில் தற்பொழுதும் இதனையே பிரசாதமாக படைக்கப்படுகிறது.ஆத்மநாதசுவாமியுடன் ஏராளமான சீடர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.அவர்களில் முக்கியமானவர் மாணிக்கவாசகர்

Athmanadha Swamy Thiruperunhturai,




Tuesday, March 18, 2014

Sadhananda Swamigal


Swami Sadhananda was born Thiruvidaimaruthur. He work as railways stationmaster. He learned Navakanda Yogi and practice from Thiruvidaimaruthur Avaduth Mouna Swamigal who take Sri Dattatreya Bhagavan as guru .

First Disciple

1909 Narayana Swamy first disciple was worked as a police officer in Chennai, Swami Sadhananda saved his job helped to catch the thief’s by miracle event. After that his life style changed. He come across Swami Sadhananda at near chitrakulam mylapore , he started serving him as a disciple. Guruji asked him to leave the job, since he could not concentrate on this and his mind was turned towards spiritual experiences. After that he bought swamy to Alapakkam village


Alapakkam Village People

The Villagers worshiped Guruji, he predict many things and which lead the surprise to the Villagers. One day Villagers see Swami while doing Navakanda Yogi ,after that Guruji left the village and settled at the Northside [ Now Sadhanandapuram ] - developing ashram, but the miracles of Guruji towards the welfare of the Village and Villagers were continued.

Swami Sadhananda was helped village peoples when there was no rain and there was a big suffering to lead life in the village without water. Guruji did miracle through the Pillayar Temple situated near the ashram, asked the villagers to just turn upside down the statue of Pillayar. Surprisingly there was heavy rain and the problem of water was solved. When villagers came back to thank him, he asked them to straighten the statue to normal pose. Besides which being a Navakanda Yogi he did miracles in the Ashram several times not just to admire him but to make understood the importance and usefulness of the Sidha Yogam.

Srimath Sadhananda's Jeeva Samaathi

Srimath Sadhananda's him self preferred place and time for Jeeva Samaathi , also order his disciples  Narayana Swamy and Velusamy to do all his last ritual . 1922 During 22nd of Tamil month Thai - Magam Nakshathra , Sadhananda Swamigal prepared himself for his Jeeva Samathi (Spirit leaving the body while sitting in Dhyana) and entered into the endless spiritual journey

Also contain samadhi's of his disciples Narayana swamingal,Veluswami swamingal, Pichai swamingal, agandapuri swamigal, Mayaa swamigal and gopal swamingal.

You please kindly come to jeeva samadhi and receive the blessings of Lord Siva-Sath-Gurunathar

Sadhananda swamigal


Brighu


Brighu



Vara Rishi in meditation


Duvapara rishi


Garuda Magarishi


jamathakkini munivar


Sunday, February 16, 2014

kalki purana

There are numerous interpretations of Vedic tradition. Avatara means "descent" and refers to a descent of the divine into mundane form. The Garuda Purana lists ten avatars, with Kalki being the tenth. The Bhagavata Purana initially lists twenty-two avatars, but mentions an additional three for a total of twenty-five. He is presented as the twenty-second avatar on that list. Popular images depict him riding a white horse with wings, known as 'Devadatta' or God given. In these images, Kalki is brandishing a brilliant sword in his left hand, eradicating the decadence of Kali Yuga. Lord Kalki will remove darkness of kali yuga and establish new yuga (age) called satya yuga on the earth. Satya yuga is also known as Krita yuga, same way, as per the characteristics of the next cycle of four yuga, next satya yuga will be known as Panchorath Yuga.

kalki avatar of lord vishnu



In Hinduism, Kalki Devanagari: meaning 'Eternity,' 'White Horse,' or 'Destroyer of Filth') is the final incarnation of Vishnu in the current Mahayuga, foretold to appear at the end of Kali Yuga, the current epoch. Religious texts called the Puranas foretell that Kalki will be atop a white horse with a drawn blazing sword. He is the harbinger of end time in Hindu eschatology, after which he will usher in Satya Yuga.

The name Kalki is a metaphor for eternity or time. Its origins may lie in the Sanskrit word kalka which means foulness or filth. Hence, the name translates to the 'destroyer of foulness,' 'destroyer of darkness," or 'destroyer of ignorance.' Another etymology from Sanskrit is 'white horse.'
In Buddhist Kalachakra tradition, 25 rulers of the Shambhala Kingdom held the title of Kalki, Kulika or Kalki-king.During Vaishakha, the first fortnight in Shukla Paksha is dedicated to fifteen deities, with each day for a different god. In this tradition, the twelfth day is Vaishakha Dwadashi and is dedicated to Madhava, another name for Kalki.

Saptharishi-Brighu

This temple is more than 2000 years old by construction. And this sthalam dates to Dwapara yuga. Sriman Narayana is present here in 4 of His Divya roopams, “Nindraan”, “Irundhaan”, “Kidanthaan”, “Nadanthaan” (Standing, Sitting, Sleeping (laying, actually said), walking). Sri Neervanna Perumal for “Nindraan” kolam, Sri Nrisimhar for “Irundhaan”, Sri Renganatha Perumal for ”Kidanthaan”, and Sri Thrivikramar for “Nadanthaan” are present to bless the devotees.
If one prays here in Thiruneermalai, he/she gets the benefit of praying in Naachiyar koil, Thiruvaali, Thiru-Kudanthai, and Thirukoilur divya desams, says “Thirumangai Azhwar”. Benefits of praying in Srirangam and Tirupathi are bestowed on devotees, says “Boothath azhwar”. Purana also says, that being happy on tapas done by Rishis like Brighu, Markandeya, and Vaalmiki, Lord Mahavishnu appeared in this kshethram to bless them. Brahmanda purana has references to this place. In Dwapara yuga, only two hills, Ahobilam and this one were present. After the pralayam, Arjuna did an Ashwamedha Yaagam here, on which Narasimha gave him darshan, since He was pleased.

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8