Populer Artikel

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8

Saturday, January 31, 2015

திருமூலர் மதியமிழ்தம்

 
திருமூல நாயனார்
திருமூல நாயனார்

ஆனந்த மூன்றும் அறிவிரண் டொன்றாகும்
ஆனந்தஞ் சிவாய அறிவார் பலரில்லை

ஆனந்த மோடும் அறியவல் லார்கட்கு
ஆனந்தக் கூத்தாய் அகப்படுந் தானேதண்மதி பானுச் சரிபூமி யேசென்று
மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு
வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின்
தண்மதி வீழ்வள விற்கண மின்றே
இறவாத  நிலை அகர உகர மகரங்களென்னும் மூன்றுமாம்
அறிவாற்றல் அறிவென அறிவு இரண்டாம். அறிவாற்றல் - ஆணை; சத்தி. அறிவு - சிவம். இவற்றுடன் யகரம் ஒன்று கூட்ட அறிவு (சிவய) மூன்றாகும். இம் மூன்றனையும் திருவருட்டுணையால் அறிவார் பலரில்லை சிலரே யாவர்.

Tuesday, January 13, 2015

வாசியோகம்_Thirumoolar Thirumanthiram

ஓடிச் சென்று அங்கே ஒருபொருள் கண்டவர்
நாடியின் உள்ளாக நாதம் எழுப்புவர்
தேடிச் சென்று அங்கே தேனை முகந்து உண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே

உரை:

இவ்வாறு வேண்டுவதெல்லாம் வீடுபேறு என்றவாறு சிவயோக நெறியில் பட்டவர், சுழி முனை நாடியின் வழியாக உச்சிக் கமலம் அடைந்து அங்கு சிவபெருமானை கண்டவர், அந்த நாடியின் உள்ளாக ஓங்கார நாதத்தை எழுப்புவர். அந்த நாதத்தோடு ஆன்மா ஒன்றித்து நின்று சிவஞானம் அனுபவிக்க, அற்புதமான தேனாக சிவானந்தம் புசித்தவாறு, மறுபிறப்பிற்கு வித்தாக அமையக் கூடிய  கன்மச் சுவடுகள் போன்ற கூறுகள் அனைத்தையும் உடம்பிலேயே கட்டி உயிரை அணுகாது சுத்தமாக்குவர்.

Monday, January 12, 2015

பிடரி யோகம்-வாசியோகம்


"முத்தியடா மந்திரத்தை நினைக்கும்போது

   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும்

சக்தியடா மனந்தானே யோக மாகத்

    தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா!

புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற்

    பூலோக மெல்லந்தான் பணியு முன்னே;

எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம்

    ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே"

 “விளையாடிக் கருநெல்லி பறித்தே உண்ணு

    வேகாத தலையாகும் விரும்பிப்பாரு

மலையாமல் வொண்சாரை பிடித்தே யுண்ணு

    மைந்தனே சாகாக்கா லதுவே யாகும்

அலையாமல் சோதியதன் பாலை யுண்ணே

    அக்கினியாம் கம்பமடா சுழுமுனை யாச்சுக்

கலைநாலு போகிறதை யெட்டிற் சேரு

    கபடமற்ற தேகமடா கண்டு பாரே”

 “நேரப்பா நெடுந்தூரம் போகும்போது

    நிச்சயமாய்க் கம்பத்தின் நிலையைக் கண்டேன்;

வீரப்பா அக்கினி போல் படர்ந்து நிற்கும்

    வெளியொன்றுந் தெரியாம லிருக்குந்தானே”

“இருக்குமடா எங்குமொன்றாய் அக்கினிக் கம்பம்

    என்மகனே கம்பத்தின் நடுவே மைந்தா

உருக்கமுடன் பெண்ணரசி யொன்றி நிற்பாள்

“சாற்றுகிறே னென்மகனே வாசி நாதா

    சத்தியமா யண்டத்திற் செல்லும் போது

போற்றுகிற அக்கினியு

புலன்களைந்துஞ் சேர்ந்ததனாற் போத மாகும்

மாற்றிலையும் அதிகமடா வுன்றன் தேகம்

    மைந்தனே அபுரூப மாகுமப்பா

வாற்றியே நிழற் சாய்கை யற்றுப் போகும்

    வலுத்ததடா காயசித்தி யாச்சப் பாரே”

 “நூறிலேறு போதிலாறு கேணியாகும் விந்தடா

    நூறு நூறு சேருமாகின் மாரிபெய்யு மாறடா

வேறுமீச னேதுஞான வீதியேறு போதிலே

    வேதனாளு மாயனாளு மீசனாளும் வாசமாய்

கூறுநாவ தேதடாசொன் மூல நாடி யூதவே

    கோணமாமூ வாச லேறப் பாழின் மீதி லேறடா

சரடா கணேசர்பாத கேசராதி வீதியிற்

    சாருசேரு தாரக சதாசிவாய பிரம்மமே”

காகபுஜண்டர் வாசியோகம்-vaasiyogam


சென்றேனே உச்சிநீர் தாயேயாகும்


சிரசிலுள்ள நீரெல்லாம் வாலையாகும்

தீயென்றால் மூலக்கனல் உச்சிவாசல்

தீண்டிவிட்டு மேலேறிற் தீபசோதி

சொல்லுமே கபாலத்திற் சேர்ந்தவாசி

சோதியொளி கண்டிடுமே கனலாற்காலால்

நில்லுமே மூலதலம் வாசிகொண்டு

நிமிர்ந்திருந்து பார்க்கவுமே பிடரியேறும்