Populer Artikel

Thursday, January 10, 2013

திருவண்ணாமலை பவழக்குன்று


பவழக்குன்றின் மிக முக்கிய சிறப்பம்சங்கள் : அன்னை பார்வதி தவம் புரிந்து அருணாசலேஷ்வருடன் ஐக்கியமானதும், கெளமர் பகவான் ரமணர் மற்றும் பல மகரிஷிகளும் வசித்த புனிதமான இடம் இப்பவழக்குன்று. இங்கு தான் ரமண மகரிஷிகள் தனது முதல் உபதேசத்தை அன்னை அழகம்மையாருக்கு இப்பவழக்குன்றில் 1899 ஆம் ஆண்டில் அருளியதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. ஓர் சிறிய புராணக்கதை : திருக்கயிலாயத்தில் பார்வதி தேவி ஒருநாள் விளையாட்டாக சிவபெருமானின் கண்களை பொத்திக்கொள்ள உலகம் முழுவதும் இருண்டுபோனது. அதனால் உலகத்தில் உள்ள உயிர்கள் துன்பத்திற்கு உள்ளானது. அந்தப்பாவத்தை போக்கிக்கொள்ள அம்பிகை காஞ்சிபுரம் சென்று சிவபெருமானை நினைத்து தவம் இருந்தார் .அப்போது சிவபெருமான் தோன்றி திருவண்ணாமலை சென்று தவம் செய்யும்படி கூறினார் . அதன்படி பார்வதி தேவி திருவண்ணாமலை வந்து "பவழக்குன்று" மலையில் பர்ணசாலை அமைத்து கவுதம முனிவர் உதவியுடன் தவம் இருந்தார் . கார்த்திகை பரணி நாளில் பிரதோஷ நேரத்தில் மலைமேல் ஜோதி உருவாக தரிசனம் கண்டுமகிழ்ந்தார்.அப்போது சிவபெருமான் பார்வதிக்கு இடப்பாகத்தை கொடுத்து அருளாசி வழங்கினார். கோவில் சிறிய அளவு தான் எனினும் மிக்க அமைதியையும் தெளிவையும் இப்பவழக் குன்று உங்களுக்கு தரும். திருவண்ணாமலையில் தரிசிக்க வேண்டிய அற்புத ஸ்தலம் இது

2 comments:

Unknown said...

these all pictures are very nice and very natural… ... I really love these paintings. it's amazing

Karthigainathan said...

Thank You Comments, Thanks Comment, Thank You Graphics

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8