In this blog, I will be revealing the different types of yogis and their teachings. I will also draw potraits of the yogis of India. My source of inspiration is from the various sculptures found in Indian temples.
Populer Artikel
-
அக்னி கழு சித்தர் அக்னி கழு சித்தர் சிறிது காலம் தவம் மேற்கொண்ட பகுதி திருக்கச்சூரில் உள்ள மருந்தீஸ்வரர் மலையாகும். மக்களின் நோய் பிணி...
-
பூதமகாரிடியைப் பற்றி அகத்தியர் தன் நூலில் பூதமகாரிடியை கண்டவர்கள் அதிகமில்லை சண்டமாருதம் போல சலதாரை கேணிக்குள் வீற்றிருப்பார் என்றும் க...
-
Swami Sadhananda was born Thiruvidaimaruthur . He work as railways stationmaster. He learned Navakanda Yogi and practice from Thiruvi...
-
நவகண்ட ரிடி இவர் வடகாஞ்சி தென்கிழக்கில் சோழவள நாட்டில் வாழ்ந்தவர்.இவரைக் காண அசுவினி தேவர் போன்ற ஆதிசித்தர்கள் அவரிடம் ஆசி பெற்றுள்ளனர...
-
சங்க முனிவர் தமிழகத்தில் முற்காலத்தில் ஏராளமான நாதர்களும் சித்தர்களும் வாழ்ந்துள்ளனர். குறிப்பாக சதுரகிரி மலைப்பகுதியில் ஏராளமான சித்தர...
-
Thirumoolar காஞ்சி கைலாசநாதர்கோவிலில் உள் வட்டச்சுற்றில் திருமூலருக்கு தனிசன்னதி உள்ளது
-
மணிகட்டிச்சித்தர் தளவாய் மலைப்பகுதியில் வாழ்ந்தவர்.அம்மலையில் அநேக துஷ்ட மிருகங்கள் வசிக்க கூடிய பெருங்காடு அதன் அருகில் குண்டாற்று க...
-
பவணிச் சித்தர் பவணிச் சித்தர் பவணிச் சித்தர் மதுரைக்கு தென்பக்கம் திருப்பரங் குன்றத்திற்கு அருகில் பசுமலை என்ற ஒரு மலை உண்டு.அந்த ம...
Thursday, January 10, 2013
திருவண்ணாமலை பவழக்குன்று
பவழக்குன்றின் மிக முக்கிய சிறப்பம்சங்கள் : அன்னை பார்வதி தவம் புரிந்து அருணாசலேஷ்வருடன் ஐக்கியமானதும், கெளமர் பகவான் ரமணர் மற்றும் பல மகரிஷிகளும் வசித்த புனிதமான இடம் இப்பவழக்குன்று. இங்கு தான் ரமண மகரிஷிகள் தனது முதல் உபதேசத்தை அன்னை அழகம்மையாருக்கு இப்பவழக்குன்றில் 1899 ஆம் ஆண்டில் அருளியதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. ஓர் சிறிய புராணக்கதை : திருக்கயிலாயத்தில் பார்வதி தேவி ஒருநாள் விளையாட்டாக சிவபெருமானின் கண்களை பொத்திக்கொள்ள உலகம் முழுவதும் இருண்டுபோனது. அதனால் உலகத்தில் உள்ள உயிர்கள் துன்பத்திற்கு உள்ளானது. அந்தப்பாவத்தை போக்கிக்கொள்ள அம்பிகை காஞ்சிபுரம் சென்று சிவபெருமானை நினைத்து தவம் இருந்தார் .அப்போது சிவபெருமான் தோன்றி திருவண்ணாமலை சென்று தவம் செய்யும்படி கூறினார் . அதன்படி பார்வதி தேவி திருவண்ணாமலை வந்து "பவழக்குன்று" மலையில் பர்ணசாலை அமைத்து கவுதம முனிவர் உதவியுடன் தவம் இருந்தார் . கார்த்திகை பரணி நாளில் பிரதோஷ நேரத்தில் மலைமேல் ஜோதி உருவாக தரிசனம் கண்டுமகிழ்ந்தார்.அப்போது சிவபெருமான் பார்வதிக்கு இடப்பாகத்தை கொடுத்து அருளாசி வழங்கினார். கோவில் சிறிய அளவு தான் எனினும் மிக்க அமைதியையும் தெளிவையும் இப்பவழக் குன்று உங்களுக்கு தரும். திருவண்ணாமலையில் தரிசிக்க வேண்டிய அற்புத ஸ்தலம் இது
Subscribe to:
Posts (Atom)