Populer Artikel

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8

Monday, February 29, 2016

அக்னி கழு சித்தர்


அக்னி கழு சித்தர்
அக்னி கழு சித்தர் சிறிது  காலம் தவம் மேற்கொண்ட பகுதி திருக்கச்சூரில் உள்ள மருந்தீஸ்வரர் மலையாகும். மக்களின் நோய் பிணி நீக்க சிவபெருமானின் ஆசி பெற்று திருக்கச்சூரில் மருந்தீஸ்வரர் மலையில் வாழ்ந்ததாக அறிய முடிகிறது. திருக்கச்சூர் மலையில் சித்தர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் அகத்தியர் இருந்ததாகவும் மலையே மருந்து தன்மை கொண்டதாகவும் ஔசத மலை என்றும் கூறப்படுகிறது. 

Sunday, February 28, 2016

கௌசிகமாமுனி

கௌசிகமாமுனி


நின்றாரே பதினநை்தாங்  கால்தானாகும்
நீதியுள்ள கௌசிகமா முனிதானாகும்
சென்றாரே பொதிகைமலை பதினைந்தாங்கால்
செப்பரிய பதிபாசக் கலையுங்கொண்டு
வென்றிடவே சிவயோக வாசிபூண்டு
வெண்ணீறு கமண்டலமுங் கரத்திலேந்தி
நன்றியுடன் சமாதிமுகங் கொள்வதற்கு
நலமுடனே தவயோகஞ் செய்தாா்தானே.

Friday, February 26, 2016

மையினாக சித்தர்
நாடியே தென்மேற்கு வடபாகத்தில்
நளினமுள்ள மையிநாக னென்னுமேரு
கூட்டியே மையினாக சித்தரப்பா
கூட்டமது சொல்வதற்கு நாவொண்ணாது
தேடியே பர்வத்தைக் கிட்டிசென்றால்
தேற்றமுடனனேக வதிசயங் காண்பீரே.

தாளப்பா திரேதாயி னுகத்திலப்பா
தாரணியில் பிரளயங்கள் வந்தகாலம்
ஆளப்பா பேழையது செப்பனிட்டு
அப்பனே பேழைக்குள் உள்ளிருந்து
கோளப்பா தவயோக நிலையைக்கொண்டு
கொற்றவனே பேழைதனை யிறக்கினாரே.

மைனாக சித்தர் வாழ்ந்தது மேரு மலை ஆகும். மேருமலையில் அநேக அதிசயங்களை அவர் நிகழ்த்தியதாகவும் அங்கு உள்ள சிகரத்தில் தவம் செய்வார் என்றும் அவரை காணச்சென்றால் பல ஆசிகளை வழங்குவார் என்று அகத்தியர் கூறுகிறார். ஒருமுறை அவர் வாழ்ந்த காலகட்டத்தில் பிரளயங்கள் வந்த காலம் அப்போது அவர் மரத்தினால் பேழை ஒன்றை செய்து அந்த பேழைக்குல் உள்ளிருந்து பல யோகங்களை செய்ததாகவும் பிரளயம் வடிந்த பின்பு பேழையை விட்டு இறங்கி மேருமலைக்கு செல்லும் போது புலஸ்தியர் அவரிடம் ஆசி பெற்று அவரிடம் இருந்து பல நூல்களை புலஸ்தியர் பெற்று சென்றதாக அறிய முடிகிறது. 

Monday, February 22, 2016

சதுரகிரி சித்தர்கேளப்பா புலத்தியனே புனிதவானே
கெடியான சதுரகிரி மேற்கேயப்பா
கோளப்பா புனலாற்றங் கரையோரம்தான்
கொற்றவனே நெடுங்கால மிருந்தசித்து
தாளப்பா பயிரிடுங் குடிகளப்பா
தகைமையுள்ள சமுசாாி சித்தென்பாா்கள்
வாளப்பா பயிருடனே வாலுஞ்சத்து
வளம்பெரிய நாதரென்று செப்பலாமே.

Sunday, February 14, 2016

பரசுராமர்பரசுராமர் பல தலங்களுக்கு சென்று தவத்தில் ஈடுபட்டார் என்பது யாவரும் அறிந்ததே. அவ்வாறு தவத்தில் இருந்து சிவபெருமானை வழிபட்ட முக்கியமான தலம் சென்னை அருகே உள்ளது. தாம்பரத்திலிருந்து ஓரகடம் சென்று அங்கிருந்து பாலூரின் அருகில் அவர் வழிபட்ட தலம் உள்ளது. பாலூரின் அநேக பகுதிகள் அவர் வாசம் செய்த பகுதிகளாகும். பரசுராமரின் ஆற்றல்கள் அவ்வூர் முழுவதும் பரவி கிடக்கின்றன. பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப் பட்ட  அழகிய சிவலிங்கமும் தீர்த்தகுளமும் அங்கு உள்ளது. கோவில் சிதலமடைந்து விட்டது சிவலிங்கம் மாத்திரம் கம்பீரமாக உள்ளது. சிவபாணம் சுயம்பு வடிவமானது.Thursday, February 11, 2016

பிருகு முனிவர் பறக்கும் வித்தைவாழவே இன்ன மொன்று சொல்லக் கேளு.
வகையான மந்திரத்தை ஐந்து லக்கமோதி
தாழாது வாகாசந் தன்னில் மைந்தா
தப்பாமல் தம்பித்து உற்று நோக்கி
பாழாது பாயவே பறக்க லாகும்
பக்குவமாய் வாயுவது செயமுமாகும்
ஊழேது உன்னிடத்தில் ஒழியலாச்சு
உத்தமனே என்ற நாமம் பெறுகுவாயே.

ஆகாயத்தில் பறக்கும் வித்தையை நமது சித்தர்கள் நன்கு அறிந்திருந்தனர். ஒரு சில சித்தர்கள் மட்டும் இந்த கலையில் கைதேர்ந்தவர்கள் அந்த வரிசையில் முக்கியமானவர் பிருகு முனிவர். சித்தர்கள் பறக்கும் வித்தையின் ரகசியத்தை கூறாமல் மறைத்தனர். பிருகு முனிவர் இதன் முக்கியத்துவத்தை நமக்கு வெளிப்படுத்துகிறார். இந்த பாரதபூமியை பறந்து சென்று இங்கு வாழும் ரிஷிகளையும் முனிவர்களையும் மலைகாடுகளையும் குன்றுகளையும் ஆறுகளையும் அறிந்து கொண்டு பின்பு குகையில் ஒரு மனதாய் தவம் செய்  என்கிறார்.இந்த பறக்கும் வித்தையை தனது மயமாக்க ஒரு குறிப்பிட்ட யோக முறையை கூறி அதற்கு மூலமந்திரத்தையும் கூறி விநாயகரை தொழுது பொருள் பற்றி செய்கின்ற பூஜை முறைகளை வெறுத்து தவம் செய்ய வேண்டும் என்கிறார். பின்பு ஒரு முக்கியமான செய்தியை நமக்கு கூறுகிறார்

எந்தனுக்கு எதுவுந்தான் ஏற்றதல்ல
எந்தன் நூல் படிசெய்ய ஏற்றங் காணே...

எனது நூலைப் படித்து நீ சித்தி பெற்றால் போதும் மற்ற விதத்தில் எனக்கு சந்தோசம் இல்லை என்கிறார்.

Wednesday, February 3, 2016

நவசித்தாதிரிடிகள்

நவசித்தாதிரிடிகள்

நவசித்தாதிகளுக்கு நிறைய சீடர்கள் உண்டு.சீடர்கள் வெகுகாலம் குகைகளில் தபம் செய்து கொண்டே இருப்பார்களாம்.நவசித்தாதிகள் தனது சீடர்களுக்கு பல உபதேசங்களை வழங்கி சம்சார வாழ்கைக்கு அனுப்புவார்களாம் .அவ்வாறு அனுப்பும் சீடர்களுக்கு சடைமுடிகளை மழித்தும் சிவகோலங்களை மாற்றியும் அனுப்பி வைப்பார்களாம்.அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட சீடர்கள் சிலபேர் சம்சார வாழ்கை வேண்டாம் என்று கூறி வந்துவிடுவார்களாம்.சம்சார வாழ்கைக்கு சென்றவர்களுக்கு பல காணிக்கைகளை தந்தும் உதவுவார்களாம்.சம்சார வாழ்கையில் இருந்து கொண்டு ஆண்டுக்கு ஒரு முறை குருபூசைகளை செய்தும் குருவினை நினைத்தும் விண்ணுலகத்தில் சித்தி பெற்ற சித்தராக திகழ்ந்தார்களாம்.

Tuesday, February 2, 2016

குருமகாரிடி

குருமகாரிடி
குருமகாரிடி

இவர் மீனாட்சி அம்மைக்கு வரம் கொடுத்தவர்.யுகங்கள் கடந்து பல பிரளயங்கள் நேர்ந்திட்டாலும் பேருலகம் அனைத்தையும் நீ ஆள்வாய் என்றும் நாலுயுக சக்கரமுந்தந்து அதை தாபனங்கள் செய்து பின்பு சமாதி முகம் சென்றதாக கூறப்படுகிறது.

Monday, February 1, 2016

அட்டமா சித்துமுனி நாதா்


அட்டமா சித்துமுனி நாதா்


அட்டமா சித்துமுனி நாதா்தாமும்
அவனியிலே நெடுங்கால மிருந்தாா்பாரு
திட்டமுன் லோகவதி சயங்களெல்லாம்
தீா்க்கமுடன் கண்டுமிக வாராய்ந்தல்லோ
சட்டமுடன் பிரளயங்க ளெல்லாம்வென்று
சதுருடனே சாயுச்சிய பதவிகண்டு
நிட்டையிலே நெடுங்கோடி காலமட்டும்
நோ்மையுடன் யிருந்ததொரு சித்துவாமே.