Populer Artikel

Friday, January 29, 2016

வியாக்ரபாதர்



மத்யந்தனர் என்ற முனிவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மழன் என்று பெயரிட்டு வளர்த்தார் முனிவர். வேதங்களை நன்கு கற்றுணர்ந்த மழன், ‘தந்தையே! இறைவனை அடைய தவத்தினால் தானே முடியும்’ என்று கேட்டான். அதற்கு முனிவர், ‘தவம் செய்தால் மனிதனுக்கு சொர்க்கம் மட்டுமே கிடைக்கும். ஆனால் சிவ பூஜையை பக்தியுடன் செய்பவர்களுக்கு மறுபிறவி என்பதே கிடையாது’ என்றார். அது முதல் சிவபூஜை செய்ய தொடங்கினான் மழன். அதன் பயனாக மழன் முனிவர் என்று பெயர் பெற்றார். ஒரு முறை அவர் சிவபெருமானிடம் வேண்டினார். ‘என் வாழ்வில் எந்த சுகமும் வேண்டாம். உன்னைக் காலம் முழுவதும் அர்ச்சிக்கும் பாக்கியம் மட்டும் போதும். ஆகையால், சிவபூஜை செய்ய வில்வ இலைகளை பறிப்பதற்காக, வில்வ மரங்களில் ஏறும்போது வழுக்காமல் இருப்பதற்காக என் கால்களை புலிக்கால்களாகவும், கைவிரல்கள் புலி நகமாகவும் மாற அருள் செய்ய வேண்டும்’ என்று வேண்டினார்.

உண்மையான பக்திக்கு எப்போதுமே இறைவன் அருள் செய்வார். வேண்டியது போலவே மழன் முனிவரின் கால்கள்  புலிக்கால்களாகவும், கைவிரல்கள் புலியின் நகங்களாகவும் மாறிவிட்டன. புலியை, சமஸ்கிருதத்தில் ‘வியாக்ரம்’ என்று அழைப்பார்கள். எனவே சிவதரிசனம் மூலம் அரிய வரம் பெற்ற மழன் அன்று முன் வியாக்ரபாதர் என்று அழைக்கப்பட்டார்.

No comments:

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8