![]() |
In this blog, I will be revealing the different types of yogis and their teachings. I will also draw potraits of the yogis of India. My source of inspiration is from the various sculptures found in Indian temples.
Populer Artikel
-
முருகப் பெருமான் "தானடா தானிருந்து தவசு செய்து சத்தி வடிவேலுருவம் பெற்றேன் அங்கே கோனடா குருமலையைப் போலே மைந்தா குவலயத்தில் மற்...
-
சூரிய சித்தர் இவர் வாழ்ந்தது நர்மதா நதிக்கரையில்.இவர் சதாகாலமும் தவசு செய்து கொண்டே இருப்பார். வெகுகோடி மாண்பர்கள் வந்தாலும் இவரை கா...
-
புலத்தி்ய முனிவர் "நாடிடுமினிக்கேள் மகாராஜ யோகம் நாட்டுவேன் வைராக்ய ஞானம் நடத்தை யென்றறிய வாசியோகத்தில் நற்குறி விளங்கவும் நடத...
-
உதயகிரிச் சித்தர் சதுரகிரி மலை அடிவாரத்தில் தபோவனம் ஒன்று இருக்கிறது.அதனுடைய பெயர் மாவூற்று ஆகும். அந்த மாவூற்றானது சிவபெருமான்...
-
சங்க முனிவர் தமிழகத்தில் முற்காலத்தில் ஏராளமான நாதர்களும் சித்தர்களும் வாழ்ந்துள்ளனர். குறிப்பாக சதுரகிரி மலைப்பகுதியில் ஏராளமான சித்தர...
-
பரஞ்சோதி முனிவர் பாண்டிய நாட்டைச் சார்ந்த ஆயிரம் பேர்கள் தமிழகத்தை ஆளுகின்ற காலத்தில் விராலி மலைக்கு சென்று தவம் மேற்கொள்ள உறுதியாகி வ...
-
கேளப்பா புலத்தியனே புனிதவானே கெடியான சதுரகிரி மேற்கேயப்பா கோளப்பா புனலாற்றங் கரையோரம்தான் கொற்றவனே நெடுங்கால மிருந்தசித்து தாளப்பா ...
Friday, July 4, 2014
திருப்பெருந்துறை சித்தர் காரப்பெரிய நாயினார்
தீர்த்தாண்டதானம் இராமர் கோவில்
Thursday, July 3, 2014
தீர்த்தாண்டதானம் சித்தர் ஜீவசமாதி
தீர்த்தாண்டதானம் இவ்வூர் திருப்பெருந்துறையில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது.கோவிலின் பின் பகுதியில் இவரது ஜீவசமாதி அமைந்துள்ளது.அகஸ்தியர் திருப்புனவாயிலின் தபசில் இருந்த பொழுது இராமபிரான் அப்பகுதியில் வருவதை உணர்கிறார்.பின்பு இராமரை சந்தித்து தீர்த்தாண்டதானத்தில் இருக்கும் இறைவனை வழிபடுமாறு கூறுகிறார்.இராமரும் அங்கு ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி இறைவனை வழிபடுகிறார்.
![]() |
![]() |
கோவிலின் பின் பகுதியில் உள்ள சித்தரின் ஜீவசமாதி பீடம் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் காணப்படுகிறது.இச்சித்தரின் திருவுருவம் கோவிலின் பின்பகுதியில் தவக்கோலத்தில் இருப்பது போன்றும் அருகில் ஒரு மரம் மற்றும் பசு அருகில் இருப்பது போன்றும் சிற்பமாக அமைந்துள்ளது.
இராமபிரான் தீர்த்தாண்டதானத்தில் இருந்து தபசு மேற்கொண்டார் என்பதற்கு நிறைய சான்றுகள் உண்டு.தீர்த்தாண்டதானத்திற்கு அருகில் சுந்தர பாண்டிய பட்டிணம் என்ற ஒரு ஊர் உள்ளது. இந்த ஊரில் இராமபிரான் தபசு செய்த இடம் உள்ளது.அங்கு இராமரின் பாதம் உள்ளது.இக்கோவில் மிகவும் சிதலமடைந்துள்ளது.இவ்விடம் மிகவும் புதர் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)