Populer Artikel

Sunday, December 25, 2016

கைலயங்கிரி சித்தர்

கைலயங்கிரி சித்தர்
சிங்கள நாட்டில் மிகவும் புகழ் பெற்று வாழ்ந்தவர். இவர் வாழ்ந்த காலத்தில் சிங்களவர் ஆயிரம் பேர்கள் இவருக்கு உதவி புரிந்ததாகவும் இவர் இருந்த மண்டபத்தில் மிகப் பெரிய மணி இருந்ததாகவும் அந்த மணியின் ஓசை நூறு காததூரம் கேட்குமாம். மணியின் ஓசை கேட்டவுடன் சிங்களவர்கள் ஓடி வந்து அவர் முன் நிற்பார்களாம். இவ்வாறு கைலயங்கிரி சித்தர் நாலு யுகங்கள் மகேசுவரனின் தன்மையை பெற்று வாழ்ந்துள்ளார். 

முன்னொரு காலத்தில் கைலாயத்தில் இவர் வாழ்ந்த காலகட்டத்தில் பிரம்ம தேவரால் சாபத்திற்கு உள்ளாகி கைலாயங்கிரியை விட்டு வெளியில் வந்ததாக அகத்தியர் கூறுகிறார்.

Friday, October 21, 2016

பாண்டிய நாட்டு சித்தர்கள்- பரஞ்சோதி முனிவர்

பரஞ்சோதி முனிவர்
பாண்டிய நாட்டைச் சார்ந்த ஆயிரம் பேர்கள் தமிழகத்தை ஆளுகின்ற காலத்தில் விராலி மலைக்கு சென்று தவம் மேற்கொள்ள  உறுதியாகி விராலிமலையின் சுனை அருகில் இருக்கும் பரஞ்சோதி முனிவரிடம் ஆசி பெற்று அவரிடம் இருந்து ஞான உபதேச நூலைக் கேட்டனர். பரஞ்சோதி முனிவரும் அவர்களுக்கு தந்து பொதிகை மலையில் பல காலங்கள் வாழ்ந்ததாக அறியமுடிகிறது.

Sunday, October 16, 2016

புலிப்பாணி சித்தர்


புலிப்பாணி அய்யாவின்குருபூசை நாளில் பதினெட்டு சித்தர்களின் ஆசியும் நாதர்கள் மற்றும் இரிடிகளின் யோக அப்பியாசத்தை பெற்றும் எல்லாம் வல்ல எம்பெருமான் சிவபெருமானின் அருளாசினை பெற்றும் நலமுடன் வாழ புலிப்பாணி அய்யாவை வேண்டிக் கொள்வோம்.

Monday, October 3, 2016

தவநிதி முனிவர்



இவர் வாழ்ந்த பகுதி கும்பகோணம் அருகில் உள்ள திருவைகாவூர் ஆகும். திருவைகாவூரில் உள்ள சிவாலயத்திற்குள் பல காலங்கள் தவம் மேற்கொண்டார். அப்படி அவர் வாழ்ந்த காலகட்டத்தில் தவத்தில் இருந்த பொழுது வேடன் ஒருவன் மானை துரத்தி கொண்டு அவ்வாலயத்திறகுள்புகுந்தான். மான் முனிவரிடம் தஞ்சம் அடைந்தது. இதனை கண்ட வேடன் முனிவர் மீது கோபம் கொண்டு அவரை தாக்க நினைத்தான். உடனே சிவபெருமான் புலிரூபம் எடுத்து அவ்வேடனை துரத்தினார். அவன் பயந்து ஓடி அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி ஒர் இரவு பொழுதை களித்தான்.
வேடனைத் தேடி கொண்டு வேடனின் மனைவி அங்கு வந்து சேர்ந்தாள்.வேடனின் மனைவிக்கு அப்புலி மானாகவே தென்பட்டது. உண்மையை உணர்ந்த வேடன் சிவபெருமானையும் முனிவரையும் வணங்கி முக்தி பெற்றான்.

Wednesday, June 22, 2016

புலத்தி்ய முனிவர்

புலத்தி்ய முனிவர்

"நாடிடுமினிக்கேள் மகாராஜ யோகம்
நாட்டுவேன் வைராக்ய ஞானம்
நடத்தை யென்றறிய வாசியோகத்தில்
நற்குறி விளங்கவும் நடத்தை
தேடும் பூரகத்தில் முப்பத்திரண்டு
சிவ ரேசகம் பதினாறு
தெளிந்த கும்பகத்தி லறுபத்துநாலு
திருத்தமாய்த் தீருமிவ் விதமாய்க்
கொடுதப் பாமற சுழிமுனை மேவிக்
குறித்திரு கண்ணது மேவுங்
குப்பியும்வாசி ஔியது வீசும்
குறிப்பதாம் ஔியினிற் கூடிக்
கூடுமே இதுதான் மகராஐ யோகம்
கொண்டு மாத்திரைக்கொரு தீட்டிச
கோருமே யிதுபாா் தலைசுற்றி நொடிக்கக்
குறித்த மாத்திரைமிவ் வகையே."

புலத்தி்ய முனிவர் மேற்குத்த பாடல்களிலிருந்து மூச்சை உள் அடக்குவதும் ராஜயோகம் .அல்ல என்றும்.ராஜயோகம் என்றால் வாசியைக் கும்பித்து ஔியினிற் கூடவேண்ம் எனவும் சுழிமுனை  மேவவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Monday, June 20, 2016

முருகப் பெருமான்

முருகப் பெருமான்

"தானடா தானிருந்து தவசு செய்து
சத்தி வடிவேலுருவம் பெற்றேன் அங்கே
கோனடா குருமலையைப் போலே மைந்தா
குவலயத்தில் மற்றுமொறு கிாிதான் ஏது ."

முருகப் பெருமான் வாழ்ந்த காலகட்டத்தில் யோகக்கலைகளைப் பற்றி மக்களுக்கு அவ்வளவாக தெரியாது.  முருகப்பெருமான் யோகத்தால் வடிவேல் உருவம் பெற்றதாகவும் அதை கண்டு மக்கள் அதிசயத்துடனும் அவர் மேல் கோபம் கொண்டும் பல இன்னல்களை தந்துள்ளனர். இதனால் முருகப்பெருமானின் சாபத்திற்கு ஆளாகி இன்றும் வேலை நாக்கில் குத்திக்கொள்ளும் பழக்கம் இன்றும் உள்ளது. மக்களுக்கு அஞ்சி குன்றுகளில் தஞ்சம் அடைந்து சதாகாலமும் யோகநிலையில் மேல் நிலைக்கு சென்றதாக அறியமுடிகிறது. 

Wednesday, June 15, 2016

சூரிய சித்தர்

சூரிய சித்தர்

இவர் வாழ்ந்தது நர்மதா நதிக்கரையில்.இவர் சதாகாலமும் தவசு செய்து கொண்டே இருப்பார். வெகுகோடி மாண்பர்கள் வந்தாலும் இவரை காண்பது அரிதாம். சிங்கங்களும் புலிகளும் இவர் வாழ்ந்த பகுதியில் உலாவி கொண்டே இருக்குமாம். பல மிருகங்கள் வாழ்ந்த இருண்ட காட்டுப் பகுதியில் இவர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. வானவர்களும் தேவர்களும் கூட வந்து உலாவும் நீண்ட வனமாகவும் சுரிய சித்தர் வாழ்ந்த பகுதி இருந்ததாம்.

Thursday, June 9, 2016

இடைக்காடாா்


இடைக்காடாா்

இடைக்காடாா் சித்துதாமும் யெழில்பொிய 
காட்டகத்தின் மரத்தின்பொந்தில்
திருந்தவே சிவயோக நிலையிற்சென்று
தீா்க்கமுடன் கண்ணிரண்டு மூடலாகி
பருந்துமுதல் காகங்களிருந்திட்டாலும்
பாலருக்கு யாதொன்றும் தோன்றாமற்றான்
அருந்தவத்தி லிருந்துகொண்டு லவனிதன்னை
அப்பனே மறந்தசித்த ரானாா்காணே.

Wednesday, June 8, 2016

வலஞ்சுழி

பலகோடி ரிஷிகள் வழிபட்ட அர்புத சிவ லிங்கங்கள் ஒரே கோவிலில் அமைந்துள்ளன. காலத்தால் முற்பட்டதாகவும் சுயம்பு வடிவமானதாகவும் அத்திருக்கோவில் கும்பகோணம் பகுதியில் அமைந்துள்ளது. அவ்வூர் திருவலஞ்சுழி ஆகும். வலஞ்சுழி சென்றால் சிவபெருமானின் அருளைப் பெறுவது உறுதி. ஞானசம்பந்தர் மற்றும் பல அடியார்கள் வழிபட்ட அற்புத திருவூர்.


Thursday, May 26, 2016

சித்தர் அகத்தியர்

அகத்தியர் சென்னையைச் சுற்றி பல இடங்களில் யோகத்தில் ஈடுபட்டு சிவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து சிவபெருமானை வழிபட்டுள்ளார். அவ்வாறு வழிபட்ட சிவலிங்கங்கள் திருக்கச்சூர் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன.திருக்கச்சூர் மலைப்பகுதியில் மருத்துவ குணம் கொண்ட மண் வகைகள் உள்ளன. அக்காலத்தில் திருக்கச்சூர் பகுதியில் வாழ்ந்த விவசாயிகள் அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தின் அடியில் இருந்து மண்ணிணை எடுத்து வேளாண்மை செய்யப்பட்ட விளை நிலங்களில் வீசுவார்களாம். அப்படி வீசப்பட்ட நிலம் அமேக விளைச்சலைத் தருமாம். அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பச்சைக்கல்லினால் ஆன மிகப்பெரிய சிவலிங்கம் கொளத்தூர் பகுதியில் அமைந்துள்ளது. மிகவும் ஆற்றல் வாய்ந்த பகுதியாக அவ்விடம் அமைந்துள்ளது. சிவபெருமானை துளசியினால் அர்ச்சித்து பலகாலங்கள் தபத்தில் இருந்துள்ளார். மனிதநடமாட்டம் அற்ற பகுதியாகவும் அவ்விடம் அமைந்துள்ளது.



Thursday, March 31, 2016

சங்க முனிவர்


சங்க முனிவர்
தமிழகத்தில் முற்காலத்தில் ஏராளமான நாதர்களும் சித்தர்களும் வாழ்ந்துள்ளனர். குறிப்பாக சதுரகிரி மலைப்பகுதியில் ஏராளமான சித்தர்கள் யோகம் செய்வதற்கும் முலிகைகளை பயன்படுத்துவதற்கும் ஏற்ற இடமாக சதுரகிரி மலை அமைந்துள்ளது. அந்தவிதத்தில் சதுரகிரியின் அருகில் முத்துமலை என்ற ஒருமலை உண்டு. முத்துமலையின் வடக்கில் பத்மனாபன் காவும் மலையருவியும் கருங்கானலும் உண்டு. அந்த கானலுக்குள் கடுந்தவத்தை மேற்கொண்டு வாழ்ந்தவர் சங்கமுனிவர். சங்கமுனிவர் வாழ்ந்த பகுதிக்கு மேற்கே மலைச்சரிவில் சித்தர்கள் நீராடக்கூடிய சுனை உள்ளது. அந்த சுனை அடுப்புககூட்டினாற் போல் இருக்கும். அந்த சுனையில் அரிய வகை முலிகை ஒன்று உள்ளது அதன் பெயர் சந்திரப்பூடு அது முன்று அடி உயரத்தில் எருமையின் நாவைப் போன்று இருக்கும். 

Monday, March 14, 2016

சித்தர் சுந்தரானந்தா்


சித்தர் சுந்தரானந்தரைப் பற்றி வெகுவான மூடநம்பிக்கைகள் நம்மிடத்தில் இருப்பதுண்டு. சித்தர்கள் சுந்தரானந்தரைப் பற்றி மூதுலகை கட்டறுத்த சிங்கம் என்று புகழ்கின்றனர். இவருக்கு சீடர்கள் எட்டுபேர் ஆகும் முத்தான தளபதிகள் இரண்டு பேர் ஆகும். பல சித்துகளையும் தத்துவ கடலையும் கடந்த பெரும்சித்து ஆகும். உலகில் இவரைப் போன்று சித்துதன்மை உடையவரை காண்பது அறிது என்றும் சித்தர்கள் கூறுவார்கள். ஆறு சீடர்கள் நாதாக்களும் புகழும் தங்கம் என்ற பொருள் ஆசையை விட்டசிவயோகி ஆவர். இந்த ஆறு சீடர்களும் குருடாவர் கரங்களிலே வேலும் கொண்டு எந்நாளும் இருப்பர் என்று சித்தர்கள் புகழ்கின்றனர்.

Tuesday, March 8, 2016

வெள்ளியங்கிரி சமாதிசித்தா்,வனமூலி சித்தர்

சமாதிசித்தா்,வனமூலி சித்தர்


தேடவே வெள்ளியங் கிாியிலப்பா
தேவேந்திர பட்டமுடன் கோடிசித்தா்
நீடவே குகைதனிலே சமாதிசித்தா்
நெடுங்காலந் தவசிருப்பா் நாதர்தாமும்
கூடவே வனமூலி சித்தா்தாமும்
கும்பலாய்த் தவமிருப்பாா் முனிவா்தாமும்
பாடவே நடுமையம் ரிடிதானப்பா
பாலகனே தவமிருந்தாா் பண்புள்ளானே.

வெள்ளியங்கிரியில் கோடிக்கணக்கில் சித்தர்கள் குகைதனிலும் வனத்திலும் வாழ்ந்ததாகவும் குகைதனில் வாழ்ந்த சித்தர்களுக்கு சமாதி சித்தர் என்றும் வனத்தினில் வாழ்ந்த சித்தர்களுக்கு வனமூலி சித்தர் என்றும் அழைத்ததாக அறிய முடிகிறது. துவாபர யுகத்தில் நவகோடி சித்தர்களும் வெள்ளிமலையில் தபத்தில் இருப்பார்களாம். அதுமட்டும் இன்றி குறக்கூட்டத்தார்களும் மறவாமல் எந்த நாளும் யோகம் கொள்வார்களாம். அவர்கள் உலகில் நெடுங்காலம் இருந்ததாகவும் பரவெளியில் சொரூபமாக இன்றும் இருப்பார்களாம். 

Friday, March 4, 2016

டமரகனா சித்தா்

பேரான சித்தருக்கு சீடவா்க்கம்

பெருமையுள்ள மாணாக்கா் சோடசந்தான்


கூரான நகமுடனே சடையுமாகக்


கொற்றவனே சமாதிமுக மிருந்தசித்து


தேரான சமாதிதனி லிருந்துகொண்டு


தெளிவான பூரணத்தை மேலேநோக்கி


சீரான பதந்தனிலே சமாதிபூண்டு


சிற்பரனே தொண்டுமிகச் செய்தாா்பாரே.

Thursday, March 3, 2016

கமண்டல சித்தர்

கமண்டல சித்தர்


சாா்வான வராககிாி வளப்பம்கேளீா்
போற்றவே வராககிாி மேற்கேயப்பா
பொங்கமுடன் கமண்டல சித்துதாமும்
ஆற்றமுடன் மலையோரம் குண்ணுபக்கல்
அப்பனே கோபுரமா மதிலுமுண்டு
ஊற்றதிக மானதொரு நதியுமுண்டு
உத்தமனே ஐம்பீசுவர ரென்னலாமே.

என்னவே தேவதா ஸ்தானமப்பா
யெழிலான தாமனரயின் தீா்த்தமுண்டு
சொன்னபடி தாமரையின் பக்கலோரம்
சொரூபராம் கமண்டல சித்துதானும்
நன்னயமாய் திரேதாயினுகத்திலப்பா
நாதாந்த சித்தா் களுங் காணாா் காணாா்
உன்னிதமாய் புத்துடனே மரமும்தானாய்
வுத்தமனே யோகி யிருந்தாா்பாரே

கமண்டல சித்தர் வாழ்ந்த பகுதி வராககிரியின் மேற்கே ஜம்பீசுவர கோயிலும் அதன் அருகில் தாமரை தீர்த்தம் உண்டு. தீர்த்தத்தின் அருகில் கமண்டல சித்தர் வாழ்ந்ததாகவும் திரோதாய யுகத்தில் நாதர்களும் சித்தர்களும் காணமுடியதவராகவும் புற்று மற்றும் மரத்தின் அடியில் யோகநிலையில் இருப்பார் என்றும் காயகற்பம் மூன்று முறை உண்ட வெகு கோடி காலங்கள் வாழ்ந்த மிகப்பெரிய சித்தர் ஆவார். ஞானப்பால் உண்டு உலகில் யாரும் காணமுடியாத சித்தர் ஆவார்.

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில்


கல்பாக்கத்திலிருந்து 2 கி.மி. தொலைவில் உள்ள மெய்யூர் கிராமத்தில் உள்ளது ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில். சுவாமி சுயம்பு மூர்த்தி. அம்பாள் ஸ்ரீ வேதாம்பிகை. ஸ்ரீ கமண்டல சித்தர் பூஜை செய்து வழிபட்டுள்ளார். சூரியன் மற்றும் சுக்கிரன் பூஜை செய்த தலம். ராகு, கேது பரிகார தலமாக விளங்குகிறது. திருமண தடை நீங்கவும், குழந்தை வரம் வேண்டியும் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.ஆண்டிற்கு ஆறு முறை நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. எல்லா உற்சவங்களும் இக்கோயிலில் நடைபெறுகிறது. தல விருட்சம் அரச மரம். 


Monday, February 29, 2016

அக்னி கழு சித்தர்


அக்னி கழு சித்தர்
அக்னி கழு சித்தர் சிறிது  காலம் தவம் மேற்கொண்ட பகுதி திருக்கச்சூரில் உள்ள மருந்தீஸ்வரர் மலையாகும். மக்களின் நோய் பிணி நீக்க சிவபெருமானின் ஆசி பெற்று திருக்கச்சூரில் மருந்தீஸ்வரர் மலையில் வாழ்ந்ததாக அறிய முடிகிறது. திருக்கச்சூர் மலையில் சித்தர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் அகத்தியர் இருந்ததாகவும் மலையே மருந்து தன்மை கொண்டதாகவும் ஔசத மலை என்றும் கூறப்படுகிறது. 

Sunday, February 28, 2016

கௌசிகமாமுனி

கௌசிகமாமுனி


நின்றாரே பதினநை்தாங்  கால்தானாகும்
நீதியுள்ள கௌசிகமா முனிதானாகும்
சென்றாரே பொதிகைமலை பதினைந்தாங்கால்
செப்பரிய பதிபாசக் கலையுங்கொண்டு
வென்றிடவே சிவயோக வாசிபூண்டு
வெண்ணீறு கமண்டலமுங் கரத்திலேந்தி
நன்றியுடன் சமாதிமுகங் கொள்வதற்கு
நலமுடனே தவயோகஞ் செய்தாா்தானே.

Friday, February 26, 2016

மையினாக சித்தர்




நாடியே தென்மேற்கு வடபாகத்தில்
நளினமுள்ள மையிநாக னென்னுமேரு
கூட்டியே மையினாக சித்தரப்பா
கூட்டமது சொல்வதற்கு நாவொண்ணாது
தேடியே பர்வத்தைக் கிட்டிசென்றால்
தேற்றமுடனனேக வதிசயங் காண்பீரே.

தாளப்பா திரேதாயி னுகத்திலப்பா
தாரணியில் பிரளயங்கள் வந்தகாலம்
ஆளப்பா பேழையது செப்பனிட்டு
அப்பனே பேழைக்குள் உள்ளிருந்து
கோளப்பா தவயோக நிலையைக்கொண்டு
கொற்றவனே பேழைதனை யிறக்கினாரே.

மைனாக சித்தர் வாழ்ந்தது மேரு மலை ஆகும். மேருமலையில் அநேக அதிசயங்களை அவர் நிகழ்த்தியதாகவும் அங்கு உள்ள சிகரத்தில் தவம் செய்வார் என்றும் அவரை காணச்சென்றால் பல ஆசிகளை வழங்குவார் என்று அகத்தியர் கூறுகிறார். ஒருமுறை அவர் வாழ்ந்த காலகட்டத்தில் பிரளயங்கள் வந்த காலம் அப்போது அவர் மரத்தினால் பேழை ஒன்றை செய்து அந்த பேழைக்குல் உள்ளிருந்து பல யோகங்களை செய்ததாகவும் பிரளயம் வடிந்த பின்பு பேழையை விட்டு இறங்கி மேருமலைக்கு செல்லும் போது புலஸ்தியர் அவரிடம் ஆசி பெற்று அவரிடம் இருந்து பல நூல்களை புலஸ்தியர் பெற்று சென்றதாக அறிய முடிகிறது. 

Monday, February 22, 2016

சதுரகிரி சித்தர்



கேளப்பா புலத்தியனே புனிதவானே
கெடியான சதுரகிரி மேற்கேயப்பா
கோளப்பா புனலாற்றங் கரையோரம்தான்
கொற்றவனே நெடுங்கால மிருந்தசித்து
தாளப்பா பயிரிடுங் குடிகளப்பா
தகைமையுள்ள சமுசாாி சித்தென்பாா்கள்
வாளப்பா பயிருடனே வாலுஞ்சத்து
வளம்பெரிய நாதரென்று செப்பலாமே.

Sunday, February 14, 2016

பரசுராமர்



பரசுராமர் பல தலங்களுக்கு சென்று தவத்தில் ஈடுபட்டார் என்பது யாவரும் அறிந்ததே. அவ்வாறு தவத்தில் இருந்து சிவபெருமானை வழிபட்ட முக்கியமான தலம் சென்னை அருகே உள்ளது. தாம்பரத்திலிருந்து ஓரகடம் சென்று அங்கிருந்து பாலூரின் அருகில் அவர் வழிபட்ட தலம் உள்ளது. பாலூரின் அநேக பகுதிகள் அவர் வாசம் செய்த பகுதிகளாகும். பரசுராமரின் ஆற்றல்கள் அவ்வூர் முழுவதும் பரவி கிடக்கின்றன. பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப் பட்ட  அழகிய சிவலிங்கமும் தீர்த்தகுளமும் அங்கு உள்ளது. கோவில் சிதலமடைந்து விட்டது சிவலிங்கம் மாத்திரம் கம்பீரமாக உள்ளது. சிவபாணம் சுயம்பு வடிவமானது.



Thursday, February 11, 2016

பிருகு முனிவர் பறக்கும் வித்தை



வாழவே இன்ன மொன்று சொல்லக் கேளு.
வகையான மந்திரத்தை ஐந்து லக்கமோதி
தாழாது வாகாசந் தன்னில் மைந்தா
தப்பாமல் தம்பித்து உற்று நோக்கி
பாழாது பாயவே பறக்க லாகும்
பக்குவமாய் வாயுவது செயமுமாகும்
ஊழேது உன்னிடத்தில் ஒழியலாச்சு
உத்தமனே என்ற நாமம் பெறுகுவாயே.

ஆகாயத்தில் பறக்கும் வித்தையை நமது சித்தர்கள் நன்கு அறிந்திருந்தனர். ஒரு சில சித்தர்கள் மட்டும் இந்த கலையில் கைதேர்ந்தவர்கள் அந்த வரிசையில் முக்கியமானவர் பிருகு முனிவர். சித்தர்கள் பறக்கும் வித்தையின் ரகசியத்தை கூறாமல் மறைத்தனர். பிருகு முனிவர் இதன் முக்கியத்துவத்தை நமக்கு வெளிப்படுத்துகிறார். இந்த பாரதபூமியை பறந்து சென்று இங்கு வாழும் ரிஷிகளையும் முனிவர்களையும் மலைகாடுகளையும் குன்றுகளையும் ஆறுகளையும் அறிந்து கொண்டு பின்பு குகையில் ஒரு மனதாய் தவம் செய்  என்கிறார்.இந்த பறக்கும் வித்தையை தனது மயமாக்க ஒரு குறிப்பிட்ட யோக முறையை கூறி அதற்கு மூலமந்திரத்தையும் கூறி விநாயகரை தொழுது பொருள் பற்றி செய்கின்ற பூஜை முறைகளை வெறுத்து தவம் செய்ய வேண்டும் என்கிறார். பின்பு ஒரு முக்கியமான செய்தியை நமக்கு கூறுகிறார்

எந்தனுக்கு எதுவுந்தான் ஏற்றதல்ல
எந்தன் நூல் படிசெய்ய ஏற்றங் காணே...

எனது நூலைப் படித்து நீ சித்தி பெற்றால் போதும் மற்ற விதத்தில் எனக்கு சந்தோசம் இல்லை என்கிறார்.

Wednesday, February 3, 2016

நவசித்தாதிரிடிகள்

நவசித்தாதிரிடிகள்

நவசித்தாதிகளுக்கு நிறைய சீடர்கள் உண்டு.சீடர்கள் வெகுகாலம் குகைகளில் தபம் செய்து கொண்டே இருப்பார்களாம்.நவசித்தாதிகள் தனது சீடர்களுக்கு பல உபதேசங்களை வழங்கி சம்சார வாழ்கைக்கு அனுப்புவார்களாம் .அவ்வாறு அனுப்பும் சீடர்களுக்கு சடைமுடிகளை மழித்தும் சிவகோலங்களை மாற்றியும் அனுப்பி வைப்பார்களாம்.அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட சீடர்கள் சிலபேர் சம்சார வாழ்கை வேண்டாம் என்று கூறி வந்துவிடுவார்களாம்.சம்சார வாழ்கைக்கு சென்றவர்களுக்கு பல காணிக்கைகளை தந்தும் உதவுவார்களாம்.சம்சார வாழ்கையில் இருந்து கொண்டு ஆண்டுக்கு ஒரு முறை குருபூசைகளை செய்தும் குருவினை நினைத்தும் விண்ணுலகத்தில் சித்தி பெற்ற சித்தராக திகழ்ந்தார்களாம்.

Tuesday, February 2, 2016

குருமகாரிடி

குருமகாரிடி
குருமகாரிடி

இவர் மீனாட்சி அம்மைக்கு வரம் கொடுத்தவர்.யுகங்கள் கடந்து பல பிரளயங்கள் நேர்ந்திட்டாலும் பேருலகம் அனைத்தையும் நீ ஆள்வாய் என்றும் நாலுயுக சக்கரமுந்தந்து அதை தாபனங்கள் செய்து பின்பு சமாதி முகம் சென்றதாக கூறப்படுகிறது.

Monday, February 1, 2016

அட்டமா சித்துமுனி நாதா்


அட்டமா சித்துமுனி நாதா்


அட்டமா சித்துமுனி நாதா்தாமும்
அவனியிலே நெடுங்கால மிருந்தாா்பாரு
திட்டமுன் லோகவதி சயங்களெல்லாம்
தீா்க்கமுடன் கண்டுமிக வாராய்ந்தல்லோ
சட்டமுடன் பிரளயங்க ளெல்லாம்வென்று
சதுருடனே சாயுச்சிய பதவிகண்டு
நிட்டையிலே நெடுங்கோடி காலமட்டும்
நோ்மையுடன் யிருந்ததொரு சித்துவாமே.


Saturday, January 30, 2016

திருமூலத்தாா்

திருமூலத்தாா்


இட்டதொரு புலத்தியரே யின்னஞ்சொல்வோம்
எழிலான புகழ்பாலா மிகுந்தவேலா
தொட்டகுறி போலாக திருமூலத்தாா்
தோறாத திருவடியா முறைபாடெல்லாம்
வட்டமுடன் யாமுரைத்தேன் பொியநூலாய்
வாகுடனே மடாதிபதி பனிரண்டாகும்
திறமையுட நெடுங்கால மிருந்தாா்தானே.
தானான சித்தா்முனி வா்க்கத்தோா்கள்
தகமையுள்ள பீடமது வா்க்கமெல்லாம்
கோனான யெனதைய ரசுவனியாந்தேவா்
கொற்றவனா ரெந்தமக்கு யுரைத்தவண்ணம்
தேனான மனோன்மணியாள் கிருபையாலும்
தேசொளிவின் சின்மயமா மருளினாலு
பானான பரஞ்சுடராஞ் சோதியாகி
பரளெியில் யெந்நாளு மிருந்தாா்பார்


திருமூலரைப் பற்றி அகத்தியர் தனது பணிறென்டாம் காண்டத்தில் திருமூலர் வர்க்கத்தைப் பற்றியும் அவர் எந்நாளும் சுடர் வடிவாய் பரவெளியில் இருப்பதை அழகாக தனது பாடலின் வழி கூறுகிறார்.

Friday, January 29, 2016

வியாக்ரபாதர்



மத்யந்தனர் என்ற முனிவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மழன் என்று பெயரிட்டு வளர்த்தார் முனிவர். வேதங்களை நன்கு கற்றுணர்ந்த மழன், ‘தந்தையே! இறைவனை அடைய தவத்தினால் தானே முடியும்’ என்று கேட்டான். அதற்கு முனிவர், ‘தவம் செய்தால் மனிதனுக்கு சொர்க்கம் மட்டுமே கிடைக்கும். ஆனால் சிவ பூஜையை பக்தியுடன் செய்பவர்களுக்கு மறுபிறவி என்பதே கிடையாது’ என்றார். அது முதல் சிவபூஜை செய்ய தொடங்கினான் மழன். அதன் பயனாக மழன் முனிவர் என்று பெயர் பெற்றார். ஒரு முறை அவர் சிவபெருமானிடம் வேண்டினார். ‘என் வாழ்வில் எந்த சுகமும் வேண்டாம். உன்னைக் காலம் முழுவதும் அர்ச்சிக்கும் பாக்கியம் மட்டும் போதும். ஆகையால், சிவபூஜை செய்ய வில்வ இலைகளை பறிப்பதற்காக, வில்வ மரங்களில் ஏறும்போது வழுக்காமல் இருப்பதற்காக என் கால்களை புலிக்கால்களாகவும், கைவிரல்கள் புலி நகமாகவும் மாற அருள் செய்ய வேண்டும்’ என்று வேண்டினார்.

உண்மையான பக்திக்கு எப்போதுமே இறைவன் அருள் செய்வார். வேண்டியது போலவே மழன் முனிவரின் கால்கள்  புலிக்கால்களாகவும், கைவிரல்கள் புலியின் நகங்களாகவும் மாறிவிட்டன. புலியை, சமஸ்கிருதத்தில் ‘வியாக்ரம்’ என்று அழைப்பார்கள். எனவே சிவதரிசனம் மூலம் அரிய வரம் பெற்ற மழன் அன்று முன் வியாக்ரபாதர் என்று அழைக்கப்பட்டார்.

Thursday, January 7, 2016

காயசித்தி நாதர்

காயசித்தி நாதர்

காயசித்தி நாதர் வாழ்ந்த பகுதி நீலகிரி சிவிங்கிய பருவதம் ஆகும். அதன் அருகில் சவ்வாது மலை  இருக்கிறது. அந்த மலையில் சவ்வாது பூனைகள் ஏராளமாக இருக்குமாம் அதனால் சவ்வாது வாடை வீசிக்கொண்டே இருக்குமாம். அம்மலையில் வடமேற்கு பகுதியில் ஓடை ஒன்று உண்டு. அதில் வரும் தண்ணீர் நச்சு தன்மை உடையதாம். ஓடையின் அருகில் காயசித்தி நாதர் ஆசிரமம் அமைத்து வாழ்ந்ததாக அறிய முடிகிறது. இந்த மலையில் நாரத முனிவரும் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

Tuesday, January 5, 2016

சதுா்மகா ரிடி

சதுா்மகா ரிடி

பொதிகை மலையின் உச்சியில் வாழ்ந்த இவர் வாசமுனியின் சீடனாவார். சதாகாலமும் சச்சிதானந்த வெளி கண்டு வீற்றிருக்கும் சித்தர் ஆவார். வாசமுனிக்கு மூத்த சீடர் என்ற பெருமையும் குருவை மதிக்கத்தக்க பெருமை உடையவர். நெடுங்காலம் சமாதியில் இவர் இருந்தார் என்று அகத்தியர் கூறுகிறார்.

கம்பிளியாஞ் சித்தர்

கம்பிளியாஞ் சித்தர்

இவர் பொதிகை அடிவாரத்தில் வாழ்ந்தவர்.இவர் வீரம் கொண்ட சித்தர் குளிகை கொண்டு முன்று யுகங்கள் வாழ்ந்தவர்.

Saturday, January 2, 2016

நவகண்ட ரிடி

நவகண்ட ரிடி 
இவர் வடகாஞ்சி தென்கிழக்கில் சோழவள நாட்டில் வாழ்ந்தவர்.இவரைக் காண அசுவினி தேவர் போன்ற ஆதிசித்தர்கள் அவரிடம் ஆசி பெற்றுள்ளனர். மலையமுனி ரிடி அவர் வாழ்ந்த பகுதியை அரசாட்சி செய்துள்ளார். ஆட்சி புரியும் காலத்தில் மும்மாரி மழை பொழிந்ததாகவும் அவர் ஆட்சி புரிந்த நாட்டை மலையரசன் நாடு என்று போற்றினர். இவரது திறமையைக் கண்டு நவகண்ட ரிடி பல உபதேசங்களை வழங்கியதாகவும் அன்று முதல் தனது குடும்பத்தையும் சிம்மாசனத்தையும் விட்டு சமாதி கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

துவாபர ரிடி

துவாபர ரிடி


அகத்தியர் இவரை பற்றி இவருக்கு லட்சம் சீடர்கள் உண்டு என்றும் இவரை கண்டவர்கள் யாரும் இல்லை என்றும் இவர் விண்ணுலக சித்தர் என்றும் கூறுகிறார். சித்தர்கள் கூட இவரை காண்பது அறிது என்றும் பிரம்மா  திருமால் போன்றவர்கள் கூட காண முடியாதவர் என்றும் கூறுகிறார். அவரை காண வேண்டுமென்றால் தென்திசையில் இருக்க கூடிய நாதர்கள் தர்மம் செய்திருந்தால் ஒரு வேளை காணலாம் என்கிறார். மனோன்மணியாள் கடாச்சம் இருந்தால் யுகாந்த ரிடியை காண முடியும். மாநிலத்தில் நான் கண்ட பெரும் சித்தர் அவரே என்கிறார்.

Friday, January 1, 2016

இமயகிாிச் சித்தா்

இமயகிாிச் சித்தா்
இவா் வாழ்ந்தப் பகுதி சுருளிமலையில் உள்ள தேவலோக கிாியாகும்
தேவலோக மலையின் அடிவாரத்தில் ஆறு வருகிறது அந்த ஆற்றோரம் மகா கைலாசப் புடவுக்குள் அனேக சித்தா்களிருக்கக் கூடிய விசாலமான இடமிருக்குமாம்.அந்த புடவுக்குள் தான் இமயகிாிச் சித்தா் வாந்ததாக அறிய முடிகிறது.

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8