அகத்தியர் சென்னையைச் சுற்றி பல இடங்களில் யோகத்தில் ஈடுபட்டு சிவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து சிவபெருமானை வழிபட்டுள்ளார். அவ்வாறு வழிபட்ட சிவலிங்கங்கள் திருக்கச்சூர் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன.திருக்கச்சூர் மலைப்பகுதியில் மருத்துவ குணம் கொண்ட மண் வகைகள் உள்ளன. அக்காலத்தில் திருக்கச்சூர் பகுதியில் வாழ்ந்த விவசாயிகள் அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தின் அடியில் இருந்து மண்ணிணை எடுத்து வேளாண்மை செய்யப்பட்ட விளை நிலங்களில் வீசுவார்களாம். அப்படி வீசப்பட்ட நிலம் அமேக விளைச்சலைத் தருமாம். அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பச்சைக்கல்லினால் ஆன மிகப்பெரிய சிவலிங்கம் கொளத்தூர் பகுதியில் அமைந்துள்ளது. மிகவும் ஆற்றல் வாய்ந்த பகுதியாக அவ்விடம் அமைந்துள்ளது. சிவபெருமானை துளசியினால் அர்ச்சித்து பலகாலங்கள் தபத்தில் இருந்துள்ளார். மனிதநடமாட்டம் அற்ற பகுதியாகவும் அவ்விடம் அமைந்துள்ளது.

