அகத்தியர் திருமூலர் தன் சீடர்களுக்கு உபதேசம் கூறும் முறையை மிக அழகாக எடுத்துரைக்கிறார்.திருமூலரிடம் உபதேசம் பெற்ற சித்தர்கள் அவனியில் அதிகபேர்கள் உண்டு என்று கூறுகிறார் . சதாகாலமும் அவரைச் சுற்றி அநேக சித்தவர்க்கம் வீற்றிருப்பர் என்றும் பாரினிலே மூலவர்க்கத்தார்கள் கோடிக்கணக்கில் இருப்பர் என்றும் கூறுகிறார்.
"மூலராந் திருமூல ரிடியார்தாமும்
முனையான சீஷவர்க்க மானபேர்க்கு
காலனது வுபதேசஞ் சொல்லுவார்பார் "
"பாலன்னம் நீரையது பகுந்துவுண்ணும்
பாங்கான கதைபோல சீஷவர்க்கம் "
"அதிதமாம் ஞானோப தேசம்பெற்று
வவனிதனி லிருப்பவரே சித்தராகும் "
"கதிதமாம் மண்டபத்தை சுற்றியல்லோ
காட்சியுடன் வீற்றிருப்பார் சித்தர்வர்க்கம் "
"பதிதமாந் திருமூல வர்க்கத்தார்கள்
பாரினிலே யிருப்பார்கள் கோடியாமே "