Populer Artikel

Friday, December 28, 2012

சித்தர் காரைப்பெரிய நாயனார் யோக சமாதி
தல சிறப்பு : இத்தலம் உசிலை மரங்கள் வயல்கள் நிறைந்திருந்ததால் காரைவயல் என்றழைக்கப்பட்டது தற்போது இப்பெயரே "கார வயல்' என்று சுருங்கிவிட்டது.பவுர்ணமியன்று மாலையில் பேச்சியம்ம னுக்கு ஏழு வகையான அபிஷேகமும்,சித்தர் காரைப்பெரிய நாயனாருக்கு பாலபிஷேகமும் செய்கிறார்கள்.
உசிலை மரங்கள் அடிவாரத்தில் பேச்சியம்மன்

திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும். முன்கூட்டியே அர்ச்சகரை தொடர்பு கொண்டால், வசதிப்படி தரிசிக்கலாம்.

பொது தகவல் : இது சிறிய கோயில். கோபுரம், கொடிமரம் கிடையாது.சித்தர் காரைப்பெரிய நாயனார் சன்னதி கோஷ்டத்தில் ஐயனார் இருக்கிறார்.

சிறப்பு: உசிலை மரங்கள் அடிவாரத்தில் அமைந்த கோயில் இது.சிவலிங்கம் போன்று அமைந்த நாகம் குடை பிடிப்பது போல அமைந்த கோயில் இது.சிறிய சன்னதியில் காரைப்பெரிய நாயனார் காட்சி தருகிறார்.கோயிலுக்கு அருகில் சித்தர் உருவாக்கியதாகக் கருதப்படும் உசிலை தீர்த்தம் உள்ளது.

நாயனார் சுவாமி சன்னதிக்குப் முன்புறம், பேச்சியம்மன் கோயில் உள்ளது.இயற்கையாக அமைந்த இக்கோயில், பார்ப்பதற்கு தீபத்தின் ஒளி சுடர்விட்டு பிரகாசிப்பதைப் போல அமைந்துள்ளது.

பக்தர்கள் தங்கள் மனம் ஒரு நிலைப்படவும், சிவன், சித்தர்களின் அருள் கிடைக்கவும் இதற்கு முன்பாக அமர்ந்து தியானம் செய்து செல்கின்றனர்.சித்தர்கள் தவம் புரிந்த இடங்கள், இந்த கோயில் பகுதியில் வேறுவேறு இடங்களில் உள்ளது.கோயில் வளாகத்தில் உசிலை மரங்கள் அடிவாரத்தில் பேச்சியம்மன் மட்டும் இருக்கிறார். நேர்த்திக்கடன் : சுவாமி,சித்தர் காரைப்பெரிய நாயனாருக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

நெல் வயல்கள் சூழ்ந்த இந்த அழகான கார வயல் கிராமம்,அறந்தாங்கிலிருந்து திருபெருந்துறை செல்லும் சாலையில், 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8