காயசித்தி நாதர் |
காயசித்தி நாதர் வாழ்ந்த பகுதி நீலகிரி சிவிங்கிய பருவதம் ஆகும். அதன் அருகில் சவ்வாது மலை இருக்கிறது. அந்த மலையில் சவ்வாது பூனைகள் ஏராளமாக இருக்குமாம் அதனால் சவ்வாது வாடை வீசிக்கொண்டே இருக்குமாம். அம்மலையில் வடமேற்கு பகுதியில் ஓடை ஒன்று உண்டு. அதில் வரும் தண்ணீர் நச்சு தன்மை உடையதாம். ஓடையின் அருகில் காயசித்தி நாதர் ஆசிரமம் அமைத்து வாழ்ந்ததாக அறிய முடிகிறது. இந்த மலையில் நாரத முனிவரும் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.