Populer Artikel

Showing posts with label அத்திரி மகா ரிஷி. Show all posts
Showing posts with label அத்திரி மகா ரிஷி. Show all posts

Thursday, April 3, 2014

Brahmarshi Atri-அத்திரி மகா ரிஷி

அத்திரி மகா ரிஷி தாணிப்பாறை மலையிலிருந்துவடக்கு முகமாய் போகிற பாதை வழி வந்தால் அம்பிடும் தூரத்தில் கருப்பணசுவாமி கோவில் இருக்கிறது.

அத்திரி மகா ரிஷி

அத்திரி மகா ரிஷி தாணிப்பாறை மலையிலிருந்துவடக்கு முகமாய் போகிற பாதை வழி வந்தால் அம்பிடும் தூரத்தில் கருப்பணசுவாமி கோவில் இருக்கிறது.அதை கடந்து கூப்பிடும் தூரம் வந்தால் குதிரை குத்திப்பாறை இருக்கிறது.அந்தப் பாறைக்கு வடக்கு முகமாய் போகிற ஆற்றைக் கடந்து வடப்பக்கம் கூப்பிடும் தூரத்தில் படிவெட்டிப்பாறை இருக்கிறது.

அதை கடந்து அம்பிடும் தூரம் வந்தால் ஒரு காட்டாறு வருகிறது.அதற்கு வடப்பக்கம் போகிற பாதையில் அரைநாழிகை வழி தூரம் போனால் கவுண்டின்னிய ஆறு வருகிறது.அந்த ஆற்றுக்கு மேல்புறம் பத்தடி தூரத்தில் இருக்கிற அத்தி ஊற்றுக்கு வடப்பக்கம் அத்திரி மகாரிஷி யாகம் செய்த பாறை இருக்கிறது.பாறையின் மேல்பக்கம் அவருடைய ஆஸ்ரமம் இருந்ததாக கோரக்கர் கூறுகிறார்.

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8