நாடியே தென்மேற்கு வடபாகத்தில்
நளினமுள்ள மையிநாக னென்னுமேரு
கூட்டியே மையினாக சித்தரப்பா
கூட்டமது சொல்வதற்கு நாவொண்ணாது
தேடியே பர்வத்தைக் கிட்டிசென்றால்
தேற்றமுடனனேக வதிசயங் காண்பீரே.
தாளப்பா திரேதாயி னுகத்திலப்பா
தாரணியில் பிரளயங்கள் வந்தகாலம்
ஆளப்பா பேழையது செப்பனிட்டு
அப்பனே பேழைக்குள் உள்ளிருந்து
கோளப்பா தவயோக நிலையைக்கொண்டு
கொற்றவனே பேழைதனை யிறக்கினாரே.
மைனாக சித்தர் வாழ்ந்தது மேரு மலை ஆகும். மேருமலையில் அநேக அதிசயங்களை அவர் நிகழ்த்தியதாகவும் அங்கு உள்ள சிகரத்தில் தவம் செய்வார் என்றும் அவரை காணச்சென்றால் பல ஆசிகளை வழங்குவார் என்று அகத்தியர் கூறுகிறார். ஒருமுறை அவர் வாழ்ந்த காலகட்டத்தில் பிரளயங்கள் வந்த காலம் அப்போது அவர் மரத்தினால் பேழை ஒன்றை செய்து அந்த பேழைக்குல் உள்ளிருந்து பல யோகங்களை செய்ததாகவும் பிரளயம் வடிந்த பின்பு பேழையை விட்டு இறங்கி மேருமலைக்கு செல்லும் போது புலஸ்தியர் அவரிடம் ஆசி பெற்று அவரிடம் இருந்து பல நூல்களை புலஸ்தியர் பெற்று சென்றதாக அறிய முடிகிறது.