தீர்த்தாண்டதானம் இவ்வூர் திருப்பெருந்துறையில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது.கோவிலின் பின் பகுதியில் இவரது ஜீவசமாதி அமைந்துள்ளது.அகஸ்தியர் திருப்புனவாயிலின் தபசில் இருந்த பொழுது இராமபிரான் அப்பகுதியில் வருவதை உணர்கிறார்.பின்பு இராமரை சந்தித்து தீர்த்தாண்டதானத்தில் இருக்கும் இறைவனை வழிபடுமாறு கூறுகிறார்.இராமரும் அங்கு ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி இறைவனை வழிபடுகிறார்.
கோவிலின் பின் பகுதியில் உள்ள சித்தரின் ஜீவசமாதி பீடம் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் காணப்படுகிறது.இச்சித்தரின் திருவுருவம் கோவிலின் பின்பகுதியில் தவக்கோலத்தில் இருப்பது போன்றும் அருகில் ஒரு மரம் மற்றும் பசு அருகில் இருப்பது போன்றும் சிற்பமாக அமைந்துள்ளது.
இராமபிரான் தீர்த்தாண்டதானத்தில் இருந்து தபசு மேற்கொண்டார் என்பதற்கு நிறைய சான்றுகள் உண்டு.தீர்த்தாண்டதானத்திற்கு அருகில் சுந்தர பாண்டிய பட்டிணம் என்ற ஒரு ஊர் உள்ளது. இந்த ஊரில் இராமபிரான் தபசு செய்த இடம் உள்ளது.அங்கு இராமரின் பாதம் உள்ளது.இக்கோவில் மிகவும் சிதலமடைந்துள்ளது.இவ்விடம் மிகவும் புதர் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது.
No comments:
Post a Comment