திருப்பெருந்துறை ஆத்மநாதர் கோவிலின் பின் பகுதியில் தீர்த்தக்குளம் ஒன்று உள்ளது.இக்குளத்தின் பின் பகுதியில் இச்ஜீவசமாதி அமைந்துள்ளது.இச்ஜீவசமாதியே புலஸ்தியரின் ஜீவசமாதி என்று எனது குருநாதர் கூறினார்.இவ்வூர் மக்கள் புலஸ்தியரை முதலியப்பர் என்று கூறுவது வழக்கம் என்றும் புலஸ்தியருடன் அவரது சீடர்கள் அங்கு வாழ்ந்ததாகவும் அவர்கள் தபசு செய்த இடம் என்றும் கூறினார்.இவ்விடம் ஏரி கரை ஓரத்தில் அமைந்துள்ளது.தபசு செய்வதற்கு ஏற்ற இடமாகவும் இது உள்ளது.
இவ்விடத்தில் முதலியப்பர் யோகநிலையில் இருப்பது போன்று சிலை உள்ள்து.அதற்கு கீழ் சதுர ஆவுடை அமைந்துள்ளது.இந்த ஆவுடை ஆத்மநாதரின் ஆவுடை போன்றே அமைந்துள்ளது.இங்கு வணங்க வருபவர்கள் எந்த வித பூசை பொருள்களையும் சாத்த கூடாது.குறிப்பிட்ட ஒரு வகை இலையை மட்டுமே அவருக்கு இட வேண்டும்.இவ்விலை ரகசியமானது.இந்த இடத்திற்கு செல்வோருக்கு திரும்பிவர மனமிராது.அவசியம் கண்டு களிக்க வேண்டிய யோகபூமி.இவ்விடம் ஆதினத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.