சமாதிசித்தா்,வனமூலி சித்தர் |
தேடவே வெள்ளியங் கிாியிலப்பா
தேவேந்திர பட்டமுடன் கோடிசித்தா்
நீடவே குகைதனிலே சமாதிசித்தா்
நெடுங்காலந் தவசிருப்பா் நாதர்தாமும்
கூடவே வனமூலி சித்தா்தாமும்
கும்பலாய்த் தவமிருப்பாா் முனிவா்தாமும்
பாடவே நடுமையம் ரிடிதானப்பா
பாலகனே தவமிருந்தாா் பண்புள்ளானே.
வெள்ளியங்கிரியில் கோடிக்கணக்கில் சித்தர்கள் குகைதனிலும் வனத்திலும் வாழ்ந்ததாகவும் குகைதனில் வாழ்ந்த சித்தர்களுக்கு சமாதி சித்தர் என்றும் வனத்தினில் வாழ்ந்த சித்தர்களுக்கு வனமூலி சித்தர் என்றும் அழைத்ததாக அறிய முடிகிறது. துவாபர யுகத்தில் நவகோடி சித்தர்களும் வெள்ளிமலையில் தபத்தில் இருப்பார்களாம். அதுமட்டும் இன்றி குறக்கூட்டத்தார்களும் மறவாமல் எந்த நாளும் யோகம் கொள்வார்களாம். அவர்கள் உலகில் நெடுங்காலம் இருந்ததாகவும் பரவெளியில் சொரூபமாக இன்றும் இருப்பார்களாம்.