Populer Artikel

Friday, July 4, 2014

திருப்பெருந்துறை சித்தர் காரப்பெரிய நாயினார்

சித்தர் காரப்பெரிய நாயினார்
திருப்பெருந்துறையில் இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இச்சித்தரின் ஜிவசமாதி ஊரின் பெயர் காராவயல்.இவர் ஆதியில் வாழ்ந்த சித்தர் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்விடம் உசிலை மர வனமாக உள்ளது.தபசு செய்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது.இச்சித்தருடன் ஏராளமான சீடர்கள் இருந்ததாக தெரிகிறது.இவர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள் இப்பகுதி எங்கும் பரவி கிடக்கின்றன.சித்தரின் ஜீவசமாதி பீடம் சதுரவடிவாக உள்ளது.பீடத்திற்கு பின்புறம் தற்போது நாகத்தின் சிலை வைக்கப்பட்டுள்ளது.


தீர்த்தாண்டதானம் இராமர் கோவில்


தீர்த்தாண்டதானத்தில் இராமபிரான் தங்கி இருந்து தபசு மேற்கொண்ட மற்றொரு பகுதி முத்துகுடா.இவ்வூர் தீர்த்தாண்டதானத்திற்கு அருகில் உள்ளது.தீர்த்தாண்டதானம்,முத்துகுடா,சுந்தர பாண்டிய பட்டிணம் இவை யாவும் திருப்புணவாயிலுக்கு அருகில் உள்ளது.திருப்புணவாயிலில் இருந்து திருப்பெருந்துறை 20 கி.மீ தொலைவில் உள்ளது.முத்துகுடா இராமர் கோவில் கருங்கல்லால் கட்டப்படாத கோவில்.இராமரின் உருவம் மட்டும் கருங்கல்லில் உல்ளது.இது கோவில் போன்ற அமைப்பில் உள்ளது.இதனுடைய விளக்கம் சரியாக எனக்கு புரியவில்லை.

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8