வாழவே இன்ன மொன்று சொல்லக் கேளு.
வகையான மந்திரத்தை ஐந்து லக்கமோதி
தாழாது வாகாசந் தன்னில் மைந்தா
தப்பாமல் தம்பித்து உற்று நோக்கி
பாழாது பாயவே பறக்க லாகும்
பக்குவமாய் வாயுவது செயமுமாகும்
ஊழேது உன்னிடத்தில் ஒழியலாச்சு
உத்தமனே என்ற நாமம் பெறுகுவாயே.
ஆகாயத்தில் பறக்கும் வித்தையை நமது சித்தர்கள் நன்கு அறிந்திருந்தனர். ஒரு சில சித்தர்கள் மட்டும் இந்த கலையில் கைதேர்ந்தவர்கள் அந்த வரிசையில் முக்கியமானவர் பிருகு முனிவர். சித்தர்கள் பறக்கும் வித்தையின் ரகசியத்தை கூறாமல் மறைத்தனர். பிருகு முனிவர் இதன் முக்கியத்துவத்தை நமக்கு வெளிப்படுத்துகிறார். இந்த பாரதபூமியை பறந்து சென்று இங்கு வாழும் ரிஷிகளையும் முனிவர்களையும் மலைகாடுகளையும் குன்றுகளையும் ஆறுகளையும் அறிந்து கொண்டு பின்பு குகையில் ஒரு மனதாய் தவம் செய் என்கிறார்.இந்த பறக்கும் வித்தையை தனது மயமாக்க ஒரு குறிப்பிட்ட யோக முறையை கூறி அதற்கு மூலமந்திரத்தையும் கூறி விநாயகரை தொழுது பொருள் பற்றி செய்கின்ற பூஜை முறைகளை வெறுத்து தவம் செய்ய வேண்டும் என்கிறார். பின்பு ஒரு முக்கியமான செய்தியை நமக்கு கூறுகிறார்
எந்தனுக்கு எதுவுந்தான் ஏற்றதல்ல
எந்தன் நூல் படிசெய்ய ஏற்றங் காணே...
எனது நூலைப் படித்து நீ சித்தி பெற்றால் போதும் மற்ற விதத்தில் எனக்கு சந்தோசம் இல்லை என்கிறார்.