புலத்தி்ய முனிவர் |
"நாடிடுமினிக்கேள் மகாராஜ யோகம்
நாட்டுவேன் வைராக்ய ஞானம்
நடத்தை யென்றறிய வாசியோகத்தில்
நற்குறி விளங்கவும் நடத்தை
தேடும் பூரகத்தில் முப்பத்திரண்டு
சிவ ரேசகம் பதினாறு
தெளிந்த கும்பகத்தி லறுபத்துநாலு
திருத்தமாய்த் தீருமிவ் விதமாய்க்
கொடுதப் பாமற சுழிமுனை மேவிக்
குறித்திரு கண்ணது மேவுங்
குப்பியும்வாசி ஔியது வீசும்
குறிப்பதாம் ஔியினிற் கூடிக்
கூடுமே இதுதான் மகராஐ யோகம்
கொண்டு மாத்திரைக்கொரு தீட்டிச
கோருமே யிதுபாா் தலைசுற்றி நொடிக்கக்
குறித்த மாத்திரைமிவ் வகையே."
புலத்தி்ய முனிவர் மேற்குத்த பாடல்களிலிருந்து மூச்சை உள் அடக்குவதும் ராஜயோகம் .அல்ல என்றும்.ராஜயோகம் என்றால் வாசியைக் கும்பித்து ஔியினிற் கூடவேண்ம் எனவும் சுழிமுனை மேவவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.