பூபால முனிவர்
பூபால முனிவர் வாழ்ந்த பகுதி பூரிமலை ஆகும்.சிவத்தியான முனிவர் குகையிலிருந்து நேர்கிழக்காக வருகிற பாதையில் வந்து வடக்கே போகிற பாதையில் அரை நாழிகை வழி தூரம் வந்தால் அனேக மரங்கள் சூழ்ந்த வனம் என்றும் அங்கு நெல்லி மரங்கள் அனேகமிருக்கிறது என்கிறார் கோரக்கர்.அந்த மரம் பெரியதாக இருக்கும் என்கிறார்.அந்த வனத்துக்கு கீழ்பக்கம் வருகிற பாதையில் அரைவழி தூரத்தில் ஓடை இருக்கிறது என்கிறார்.அந்த ஓடையில் கூப்பிடும் தூரம் போனால் அனேக மரஞ்செடிகொடிகள் சூழ்ந்த வனத்தின் மேல்பக்கம் உள்ள பகுதியில் பூபால முனிவர் ஆஸ்ரமம் இருந்ததாக கோரக்க முனிவர் கூறுகிறார்.