கமண்டல சித்தர் |
சாா்வான வராககிாி வளப்பம்கேளீா்
போற்றவே வராககிாி மேற்கேயப்பா
பொங்கமுடன் கமண்டல சித்துதாமும்
ஆற்றமுடன் மலையோரம் குண்ணுபக்கல்
அப்பனே கோபுரமா மதிலுமுண்டு
ஊற்றதிக மானதொரு நதியுமுண்டு
உத்தமனே ஐம்பீசுவர ரென்னலாமே.
என்னவே தேவதா ஸ்தானமப்பா
யெழிலான தாமனரயின் தீா்த்தமுண்டு
சொன்னபடி தாமரையின் பக்கலோரம்
சொரூபராம் கமண்டல சித்துதானும்
நன்னயமாய் திரேதாயினுகத்திலப்பா
நாதாந்த சித்தா் களுங் காணாா் காணாா்
உன்னிதமாய் புத்துடனே மரமும்தானாய்
வுத்தமனே யோகி யிருந்தாா்பாரே
கமண்டல சித்தர் வாழ்ந்த பகுதி வராககிரியின் மேற்கே ஜம்பீசுவர கோயிலும் அதன் அருகில் தாமரை தீர்த்தம் உண்டு. தீர்த்தத்தின் அருகில் கமண்டல சித்தர் வாழ்ந்ததாகவும் திரோதாய யுகத்தில் நாதர்களும் சித்தர்களும் காணமுடியதவராகவும் புற்று மற்றும் மரத்தின் அடியில் யோகநிலையில் இருப்பார் என்றும் காயகற்பம் மூன்று முறை உண்ட வெகு கோடி காலங்கள் வாழ்ந்த மிகப்பெரிய சித்தர் ஆவார். ஞானப்பால் உண்டு உலகில் யாரும் காணமுடியாத சித்தர் ஆவார்.
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில்
கல்பாக்கத்திலிருந்து 2 கி.மி.
தொலைவில் உள்ள மெய்யூர் கிராமத்தில் உள்ளது ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில்.
சுவாமி சுயம்பு மூர்த்தி. அம்பாள் ஸ்ரீ வேதாம்பிகை. ஸ்ரீ கமண்டல சித்தர்
பூஜை செய்து வழிபட்டுள்ளார். சூரியன் மற்றும் சுக்கிரன் பூஜை செய்த தலம்.
ராகு, கேது பரிகார தலமாக விளங்குகிறது. திருமண தடை நீங்கவும், குழந்தை வரம்
வேண்டியும் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.ஆண்டிற்கு ஆறு முறை நடராஜருக்கு
அபிஷேகம் நடைபெறுகிறது. எல்லா உற்சவங்களும் இக்கோயிலில் நடைபெறுகிறது. தல
விருட்சம் அரச மரம்.
No comments:
Post a Comment