இவர் தாமிரபரணி பகுதியில் வாழ்ந்தவர் . ஆற்றின் பாதாள பகுதிக்குள் மண்டபம் இருந்ததாகவும் அங்கு வருணரிடி தவம் ஏற்றியதாகவும்
கூறப்படுகிறது . வருணரிடியை காணவேண்டுமென்றால் ஆற்றின் தலைவாசலில் இருந்து கொண்டு வயிரவனை
பூசித்தால் பாறை திறந்து அவரை காணமுடியும்.
ரிடிகளில் இவரே மிகவும் தேர்ச்சி பெற்ற பெரியவர் . ரிடியாருக்கு
பூதங்கள் பணிகள் செய்வதாகவும் பூமிக்குள் ஒடுங்கி சதாகாலமும் நிஷ்டையில் இருப்பார்
என்றும் கூறப்படுகிறது. இவர் மூப்பகற்றி சோதிப்பிரகாசம் போல் தபத்தில் இருக்கும்பொழுது
சித்தர்கள் இவரை காண வந்ததாகவும் ரிடியார் கண் திறந்தபோது சித்தர்கள் அவரைக் கண்டு
நடுங்கி போனதாகவும் பின்பு அஞ்சலிகள் மிகவும் செய்து அவர் மடி வணங்கி வானசாஸ்திர நூல்களை
பெற்றதாகவும் கூறப்படுகிறது.
அவருடைய சில குறிப்பிடத்தக்க நூல்கள் ;
- நட்சத்திர மாலை
- கணிதநூல் சாஸ்திரம்
- பஞ்சாங்க கணிதவேதம்
- வானநூல் சுருக்கம்
- பூமிநூல் ஆயிரம்
- சுகர்பதி எண்ணாயிரம்
- பஞ்சபச்சி வினாடி கிரகந்தம்
No comments:
Post a Comment