அகத்தியரின் குரு அஸ்வினி தேவர் அதனை தனக்கு கூறியதாகவும் கூறுகின்றார் .
அக்காலத்தில் சித்தர்கள் பலபல தொகுப்புகளாக
வாழ்ந்துள்ளனர் . அப்படி வாழ்ந்த சித்தர்கள் தமிழகத்தில் கோடிக்கணக்கில் இருந்துள்ளனர் .
முதல் வர்க்கம் நாதாக்கள் இவர்கள் அறுபது பேர்கள் இவர்களே முதன்முதலில்
கற்பமுண்டவர்கள் இதில் ஞானம் பெற்றவர்கள் எண்பது பேர்கள் .
அடுத்தது கம்பிளியான் தொகுப்பைச் சார்ந்தவர்கள் நூறு சித்தர்கள்
என்றும் கோனார் தொகுப்பில் நூறு சித்தர்கள் என்றும் அதில் நுட்பம் பெற்ற சித்தர்கள்
இருநூறு பேர்கள் என்றும் கூறுகிறார் .
கண்ணடியர் என்ற தொகுப்பில் ஆயிரம் சித்தர்கள் இருந்ததாகவும் ரோமர்
என்ற தொகுப்பில் நாநூறு சித்தர்கள் வாழ்ந்ததாகவும் கொங்கிணியர் என்ற தொகுப்பில் இருநூறு
சித்தர்கள் வாழ்ந்ததாகவும் கூறுகிறார் .
தமிழகத்தில் கண்டாமகரிஷியர் என்ற தொகுப்பும் இருந்துள்ளது . இவர்களை
அகத்தியர் நாதர்கள் என்று கூறுகிறார் .
பவுஷமகரிஷி கூட்டம் விடலாபுரி என்ற பகுதியில்
வாழ்ந்ததாகவும் குளிகை உண்ட பெரிய சித்தர்கள் இருநூறு பேர்கள் என்றும் கூறுகிறார் .
குடகுமலை
பகுதியில் வாழ்ந்த சித்தர்களுக்கு மூப்பனார் என்று பெயர் . இவர்கள் நாநூறு பேர்கள் ஆகும் .
அழகர் கூட்டம் என்ற தொகுப்பில் எழுநூறு சித்தர்கள் என்றும் குறும்பர் கூட்டத்தில் ஆயிரம்
சித்தர்கள் வாழ்ந்ததாகவும் மறவர் தொகுப்பில் முன்னூறு சித்தர்கள் என்றும் நாயனார் கூட்டத்தில்
நூற்றுப்பத்து சித்தர்கள் இருந்ததாகவும் கூறுகிறார்
கஞ்சமலை பகுதியில் வாழ்ந்த சித்தர்களுக்கு ஒசக்கூட்டத்தார் என்று
பெயர் இவர்களை அக்காலத்தில் முனிக்கூட்டம்
என்று அழைப்பர் தற்போது இவர்களை நாம் பூசாரிகள் என்று அழைக்கிறோம்
No comments:
Post a Comment