Populer Artikel

Thursday, March 31, 2016

சங்க முனிவர்


சங்க முனிவர்
தமிழகத்தில் முற்காலத்தில் ஏராளமான நாதர்களும் சித்தர்களும் வாழ்ந்துள்ளனர். குறிப்பாக சதுரகிரி மலைப்பகுதியில் ஏராளமான சித்தர்கள் யோகம் செய்வதற்கும் முலிகைகளை பயன்படுத்துவதற்கும் ஏற்ற இடமாக சதுரகிரி மலை அமைந்துள்ளது. அந்தவிதத்தில் சதுரகிரியின் அருகில் முத்துமலை என்ற ஒருமலை உண்டு. முத்துமலையின் வடக்கில் பத்மனாபன் காவும் மலையருவியும் கருங்கானலும் உண்டு. அந்த கானலுக்குள் கடுந்தவத்தை மேற்கொண்டு வாழ்ந்தவர் சங்கமுனிவர். சங்கமுனிவர் வாழ்ந்த பகுதிக்கு மேற்கே மலைச்சரிவில் சித்தர்கள் நீராடக்கூடிய சுனை உள்ளது. அந்த சுனை அடுப்புககூட்டினாற் போல் இருக்கும். அந்த சுனையில் அரிய வகை முலிகை ஒன்று உள்ளது அதன் பெயர் சந்திரப்பூடு அது முன்று அடி உயரத்தில் எருமையின் நாவைப் போன்று இருக்கும். 

Monday, March 14, 2016

சித்தர் சுந்தரானந்தா்


சித்தர் சுந்தரானந்தரைப் பற்றி வெகுவான மூடநம்பிக்கைகள் நம்மிடத்தில் இருப்பதுண்டு. சித்தர்கள் சுந்தரானந்தரைப் பற்றி மூதுலகை கட்டறுத்த சிங்கம் என்று புகழ்கின்றனர். இவருக்கு சீடர்கள் எட்டுபேர் ஆகும் முத்தான தளபதிகள் இரண்டு பேர் ஆகும். பல சித்துகளையும் தத்துவ கடலையும் கடந்த பெரும்சித்து ஆகும். உலகில் இவரைப் போன்று சித்துதன்மை உடையவரை காண்பது அறிது என்றும் சித்தர்கள் கூறுவார்கள். ஆறு சீடர்கள் நாதாக்களும் புகழும் தங்கம் என்ற பொருள் ஆசையை விட்டசிவயோகி ஆவர். இந்த ஆறு சீடர்களும் குருடாவர் கரங்களிலே வேலும் கொண்டு எந்நாளும் இருப்பர் என்று சித்தர்கள் புகழ்கின்றனர்.

Tuesday, March 8, 2016

வெள்ளியங்கிரி சமாதிசித்தா்,வனமூலி சித்தர்

சமாதிசித்தா்,வனமூலி சித்தர்


தேடவே வெள்ளியங் கிாியிலப்பா
தேவேந்திர பட்டமுடன் கோடிசித்தா்
நீடவே குகைதனிலே சமாதிசித்தா்
நெடுங்காலந் தவசிருப்பா் நாதர்தாமும்
கூடவே வனமூலி சித்தா்தாமும்
கும்பலாய்த் தவமிருப்பாா் முனிவா்தாமும்
பாடவே நடுமையம் ரிடிதானப்பா
பாலகனே தவமிருந்தாா் பண்புள்ளானே.

வெள்ளியங்கிரியில் கோடிக்கணக்கில் சித்தர்கள் குகைதனிலும் வனத்திலும் வாழ்ந்ததாகவும் குகைதனில் வாழ்ந்த சித்தர்களுக்கு சமாதி சித்தர் என்றும் வனத்தினில் வாழ்ந்த சித்தர்களுக்கு வனமூலி சித்தர் என்றும் அழைத்ததாக அறிய முடிகிறது. துவாபர யுகத்தில் நவகோடி சித்தர்களும் வெள்ளிமலையில் தபத்தில் இருப்பார்களாம். அதுமட்டும் இன்றி குறக்கூட்டத்தார்களும் மறவாமல் எந்த நாளும் யோகம் கொள்வார்களாம். அவர்கள் உலகில் நெடுங்காலம் இருந்ததாகவும் பரவெளியில் சொரூபமாக இன்றும் இருப்பார்களாம். 

Friday, March 4, 2016

டமரகனா சித்தா்

பேரான சித்தருக்கு சீடவா்க்கம்

பெருமையுள்ள மாணாக்கா் சோடசந்தான்


கூரான நகமுடனே சடையுமாகக்


கொற்றவனே சமாதிமுக மிருந்தசித்து


தேரான சமாதிதனி லிருந்துகொண்டு


தெளிவான பூரணத்தை மேலேநோக்கி


சீரான பதந்தனிலே சமாதிபூண்டு


சிற்பரனே தொண்டுமிகச் செய்தாா்பாரே.

Thursday, March 3, 2016

கமண்டல சித்தர்

கமண்டல சித்தர்


சாா்வான வராககிாி வளப்பம்கேளீா்
போற்றவே வராககிாி மேற்கேயப்பா
பொங்கமுடன் கமண்டல சித்துதாமும்
ஆற்றமுடன் மலையோரம் குண்ணுபக்கல்
அப்பனே கோபுரமா மதிலுமுண்டு
ஊற்றதிக மானதொரு நதியுமுண்டு
உத்தமனே ஐம்பீசுவர ரென்னலாமே.

என்னவே தேவதா ஸ்தானமப்பா
யெழிலான தாமனரயின் தீா்த்தமுண்டு
சொன்னபடி தாமரையின் பக்கலோரம்
சொரூபராம் கமண்டல சித்துதானும்
நன்னயமாய் திரேதாயினுகத்திலப்பா
நாதாந்த சித்தா் களுங் காணாா் காணாா்
உன்னிதமாய் புத்துடனே மரமும்தானாய்
வுத்தமனே யோகி யிருந்தாா்பாரே

கமண்டல சித்தர் வாழ்ந்த பகுதி வராககிரியின் மேற்கே ஜம்பீசுவர கோயிலும் அதன் அருகில் தாமரை தீர்த்தம் உண்டு. தீர்த்தத்தின் அருகில் கமண்டல சித்தர் வாழ்ந்ததாகவும் திரோதாய யுகத்தில் நாதர்களும் சித்தர்களும் காணமுடியதவராகவும் புற்று மற்றும் மரத்தின் அடியில் யோகநிலையில் இருப்பார் என்றும் காயகற்பம் மூன்று முறை உண்ட வெகு கோடி காலங்கள் வாழ்ந்த மிகப்பெரிய சித்தர் ஆவார். ஞானப்பால் உண்டு உலகில் யாரும் காணமுடியாத சித்தர் ஆவார்.

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில்


கல்பாக்கத்திலிருந்து 2 கி.மி. தொலைவில் உள்ள மெய்யூர் கிராமத்தில் உள்ளது ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில். சுவாமி சுயம்பு மூர்த்தி. அம்பாள் ஸ்ரீ வேதாம்பிகை. ஸ்ரீ கமண்டல சித்தர் பூஜை செய்து வழிபட்டுள்ளார். சூரியன் மற்றும் சுக்கிரன் பூஜை செய்த தலம். ராகு, கேது பரிகார தலமாக விளங்குகிறது. திருமண தடை நீங்கவும், குழந்தை வரம் வேண்டியும் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.ஆண்டிற்கு ஆறு முறை நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. எல்லா உற்சவங்களும் இக்கோயிலில் நடைபெறுகிறது. தல விருட்சம் அரச மரம். 


Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8