உதயகிரிச் சித்தர்
சதுரகிரி மலை அடிவாரத்தில் தபோவனம் ஒன்று இருக்கிறது.அதனுடைய பெயர் மாவூற்று ஆகும்.
அந்த மாவூற்றானது சிவபெருமான் சடா மகுடத்திலிருந்து சித்தர்களுக்காக ஒரு துளி தீர்த்தத்தை விட அத்துளி ஊற்றாகி நாளடைவில் பெரிய குளமாக ஆகியது.அதில் தீர்த்தமாடினால் அநேக பாவங்கள் நீங்கும்.ஏனென்றால் இந்தத் தலத்தில் அநேக முனிவர்கள், ரிஷிகள் கேட்டு கொண்டதற்காக சிவபெருமான் கிருபை கூர்ந்து மகாலிங்க மூர்த்தியாக தரிசனம் கொடுத்து கொண்டிருப்பதால் புண்ணிய தலமாக உள்ளது மாவூற்று.
அந்த மாவூற்றுக்கு வடப்பக்கம் இருக்கிற உதயகிரியில் நேர்வடக்காக மலைமேல் அம்பிடும் தூரம் போனால் குகையிருக்கிறது.அந்த குகையில் உதயகிரிச் சித்தர் இருக்கிறார் என்று கோரக்கர் தன் மலைவடாகத்தில் கூறுகிறார்.