திருமூல நாயனார் |
ஆனந்த மூன்றும் அறிவிரண் டொன்றாகும்
ஆனந்தஞ் சிவாய அறிவார் பலரில்லை
ஆனந்த மோடும் அறியவல் லார்கட்கு
ஆனந்தக் கூத்தாய் அகப்படுந் தானே
தண்மதி பானுச் சரிபூமி யேசென்று
மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு
வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின்
தண்மதி வீழ்வள விற்கண மின்றே
இறவாத நிலை அகர உகர மகரங்களென்னும்
மூன்றுமாம்
அறிவாற்றல் அறிவென அறிவு இரண்டாம். அறிவாற்றல் - ஆணை; சத்தி.
அறிவு - சிவம். இவற்றுடன் யகரம் ஒன்று கூட்ட அறிவு (சிவய) மூன்றாகும். இம்
மூன்றனையும் திருவருட்டுணையால் அறிவார் பலரில்லை சிலரே யாவர்.